முதல் முறையாக மதுரையில் கேம்ர் கனெக்ட் எக்ஸ்பிரஸ்

861

 826 total views

“நாம் கண்ணாம்பூச்சி,கிட்டி,பச்சை குதிரை தாண்டுதல், பம்பரம் விளையாடிய காலம் போய் இன்று வீடியோ கேம்களை விளையாடாதவர்கள் யாரேனும் உண்டா? “என்ற நிலை வந்து விட்டது.

ஹலோ Gamers, இன்று நான் இந்தியாவில் மிகப்பெரிய கேமிங் தளங்களில் ஒன்றைப் பற்றி சொல்லப்போகிறேன் அவர்கள் GamerConnect என அழைக்கப்படுகிறார்கள்.  கேமிங் புதிய வழிகாட்டளை ஊக்குவிப்பதற்கும், ஆராய்வதற்கும் நாட்டில் உள்ள விளையாட்டு சமூக தளமாகும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் இந்தியா முழுவதிலும் 14 நிகழ்வை நடத்தியுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் வேறுபட்ட கருத்தை கொண்டு 20 எக்ஸ்பிரஸ் நிகழ்வுகள் மற்றும் 5 பெரிய நிகழ்வுகளை நடத்துவோம் என அறிவித்த நிலையில்,

மதுரையில்  ஒரு மாபெரும் கேமிங்  ஈவென் ட் கடந்த ஏப்ரல் 13ஆம்  தேதி அன்று (v.s chellam century hall)இல் நடைபெற்றது,அதில் சிறுவர்கள்,கல்லூரி மாணவர்கள்  என பலரும் நூற்றுக்கணக்கான புதிய கேம்களை விளையாடி மகிழ்ந்தனர்.

மதுரையில் நடந்த மாபெரும் கேம்ர்ஸ் கனெக்ட்  ஈவென்ட்டில் நூற்றுக்கும் அதிகமான வீடியோ கேம் பிரியர்கள்  பங்கேற்று டெக் தமிழுடன் வீடியோ கேம் பற்றிய கருத்துகளை பகிர்ந்தனர்.

“எவ்வளவுக்கெவ்வளவு வீடியோ கேம் வேடிக்கையானதோ, அதே அளவிற்கு அடிமையாக்கும் ஆபத்தும் உள்ளது”

சிறுவர் முதல் பெரியவர் வரை வீடியோ விளையாட்டுகள் பலரிடையே பிரபலமாக உள்ளன. ஆனால் அவற்றால் நன்மையா தீமையா என்று எப்போதும் ஒரு கேள்வி எழுகிறது.

இதில் என்ன சந்தேகம்? தீமைதான் என்கிறீர்களா? இல்லை நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்கின்றனர் நிபுணர்கள்.

பல கோடி மக்கள் தங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகள் வாயிலாக எப்போதும் பொழுதுபோக்க விரும்புவதால், வீடியோ கேம்களுக்கான சந்தை என்பது மிகவும் பெரியது.

ஓர் குறிப்பிட்ட  நேரத்தை ஒதுக்கி ஓர்  பொழுதுபோக்காக வீடியோ கேம் விளையாடுவதன்  மூலம் தங்கள் அறிவாற்றல் திறன் மேம்படலாம் ,ஓர் சில  புதிய விஷயங்களை நாம் கற்க வழிவகுக்கும்.மேலும் இது   தடை செய்யும் அளவுக்கு ஓர் விஷயம் அல்ல அதை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித தீமையும் கிடையாது.

You might also like

Comments are closed.