ராம்கோ மென்பொருள் நிறுவனமும் டெல் நிறுவனமும் கைகோர்க்கின்றன

857

 1,929 total views

அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது அதிகமாக உள்ளன. நம்மில் பலருக்கும் ராம்கோ நிறுவனம் என்றாலே சிமெண்ட் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே ராம்கோ நிறுவனம் ஒரு மென்பொருள் பிரிவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

பெரும் வணிக நிறுவங்களுக்கு தேவையான மென்பொருட்களை (ERP & Supply Chain Solutions) உருவாக்கி விற்பனை செய்கிறது.

இப்போது புகழ் பெற்ற டெல் (Dell Inc) நிறுவனம், ராம்கோ நிறுவனத்தின் ERP மென்பொருளை தமது SAAS (Software as a service – மென்பொருள்களை ஒவ்வொரு கணினியிலும் நிறுவி பயன் படுத்தாமல்… இணையத்தில் Cloud தளத்தில் வைத்து அனைவரும் பயன்படுத்தக் கொடுப்பதே SAAS)  பிரிவில் முதன்மையான மென்பொருளாக வைத்து பிற நிறுவனங்களுக்கும் தமது நிறுவனத்திற்க்கும் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

இது மீண்டும் ஒரு சந்தோசமான செய்தியே.

You might also like

Comments are closed.