கூகளின் அடி மடியில் கை வைக்கும் அமேசான்

605

 3,213 total views

பல ஆண்டுகளாக சிறந்த தளங்களை கொடுத்து பயணர்களை கவர்ந்த கூகள். இப்போது ஒரு பெரும் சாவாலை சந்திக்கிறது.

கூகள் தளத்தில் வரும் தேடும் கோரிக்கைகள் பொதுவாக பொது தேடல்கள் மட்டுமே.

உங்களுக்கு ஏதேனும் ஒரு வீடியோ வேண்டுமென்றால் YouTube.com நேரடியாகச் சென்று தேடுவீர்கள். YouTube தான் கூகளின் சொந்தத் தளம் தானே; ஆதலால் ஒரு பிரச்சனையும் இல்லை.
இப்போது அமெரிக்கர்கள், தங்களுக்கு ஏதேனும் ஒரு பொருளை வாங்கவேண்டும் என எண்ணி தேட கூகலை அணுகுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டனர். நேரடியாக Amazon.com தளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான பொருளை தேடுகின்றனர்.

கூகள் ஒரு தேடு பொறி மட்டுமே ஆனால் ஒரு வணிகத் தளம் அல்ல. ComScore நிறுவனம் அளித்துள்ள முடிவுகளின் படி. கூகள் நிறுவனத்தின் வணிகப் பரிவான “Google Shopping” இல் மேற்கோள்ளப் பட்ட தேடல்களில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், Amazon தளத்தில் இது 73% அதிகரித்துள்ளது.

இதனால் கூகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆம், இது பண ஆசையில் தனது Google Shopping தளத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் பணம் காட்டினால் தான் அவர்களின் பொருள்களை Google Shopping இல் வைத்து விற்க முடியும் என கடந்த ஆண்டு எடுத்த முடிவின் பெரும் தோல்வி இது.

Amazon தளத்தில் உள்ள வணிகர்கள், பொருள் விற்றால் 6% அதற்கு தரவேண்டும். ஆனால், கூகள் பொருளை தம் தளத்தில் இணைக்கும் போதே பணம் கேட்கிறது. மேலும் தமது விளம்பர (Adwords) பிரிவின் கொள்கைகளிலேயே அந்தப் பணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அதாவது., எவரேனும் ஒரு பொருளின் தொடுப்பை கிளிக் செய்தால் பணம் கரையும்.

பல வணிகர்களும் தமது கூகள் கடையை சாத்திவிட்டு அமேசான் தளத்தில் தமது பொருள்களை பட்டியல் போட்டு வைக்கின்றனர்.

இதை கூகள் ஒரு போட்டியாகவே கருதுகிறது.  தமது Google Shopping பிரிவில் வசூலிக்கும் கட்டணம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஏற்கனவே, Google தளத்தில் உள்ள தேடல்கள் பலவும் வெறும் முகவரி தேடல்கள் மட்டுமே. அதாவது பயனாளர் முழு அல்லது பிழையான இணைய முகவரிகளைத் தேடவே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

Searching for : tech tamil.com
Searching for: techtamil.com
Searching for: facebook.com

மேலும் தமது வாடிக்கையாளர் எவரும் தேடு பொறியை பயன்படுத்தக் கூடாது எனும் நோக்ககத்தில் Apple iPhone இல் Siri எனும் செயற்கை உதவியாளர் மூலம் பயணர் கேட்கும் அனைத்து தகவல்களையும் தருகிறது Apple.

Facebook நிறுவனமும் அடுத்த ஆண்டு ஒரு புதிய தேடு பொறியை வெளியிட உள்ளதாக சில புரளிகள் உள்ளன.

You might also like

Comments are closed.