நான் தாண்டா….

536

 1,348 total views

இந்த இரண்டு சொற்களை சொல்லவோ அல்லது மனதார நினைக்வோ மனிதன் பல முயற்சிகளை செய்து வருகிறான். அதன் முதல் மற்றும் ஒரே வழி… “நான் உன்னை விட உயர்ந்தவன்” எனச் சொல்லி அடுத்தவன் அனைவரையும் மட்டப்படுத்துவது.

இது இல்லாத இடம் இல்லவே இல்லை.

இந்தியாவில் இருக்கும் ஒரு உயர்ந்த சாதி மனிதனையும், கீழ் சாதி என நீங்கள் சொல்லும் ஒருவனையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றால்… உங்கள் இருவரின் ஒரே பெயர் “Indians”.  உங்களுக்கு மரியாதை கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும்.

அதே அமெரிக்கன்.. இங்கிலாந்து சென்றால்….. அங்கே உள்ள வெள்ளையன் அமெரிக்கனை மதிப்பதில்லை.

வெள்ளையன் சீனா சென்றால் சீனர்கள் அவர்களை மதிப்பதில்லை… சீனன் ஜப்பான் சென்றால் சப்பான் நாடுக்காரன் சீன மனிதனை மதிக்க மறுக்கிறான்.

கறுப்பன் வெள்ளையனை மதிப்பதில்லை, வெள்ளையன் எவரையும் மதிப்பதில்லை.

அட… அவன் அவன் சாதிக்குள் பெண்களை மதிப்பதில்லை… வீட்டு வேளையில் கூட… பூஜை செய்வதை அளபபறையாகச் செய்யும் குடும்பத் தலைவர் எவரும் வீடு பெருக்கவோ துணி துவைக்கவோ உதவுவதில்லை.

ஏன் என்றால் அதெல்லாம் பொம்பள செய்யுற வேலையாம்….

ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.. நான் உன்னை விடப் பெரியவன் என காட்ட….  பிறப்பது முதல் இறக்கும் வரை இந்த ஒரே லெட்சிய வெறி கொண்டு மனிதனாக வாழாமல் அனைவரும் மடிந்து போகிறோம்.

இது போன்ற பாகுப்பாடுகளை பார்க்கும் போது தெருவில் அலையும் நாய் கூட இந்த மனித இனத்தை விட மேலாகத் தெரிகிறது.

இந்த பிரபஞ்சத்தின் வாழ் நாள் கால அளவு முன்.. நாம் மனித வாழ்க்கை என்பது வெறும் தூசி போன்றது… ஆனால் இந்த 60 வருடத்தில் நாம் என்னவெல்லாமோ செய்யத் துடிக்கிறோம்.

 

You might also like

Comments are closed.