இந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014

763

 1,381 total views

இன்ஃபோஸிசின் நிறுவனர்களில் ஒருவரும், முதல் செயல் அதிகாரியுமான நாராயனமூர்த்தி. தனது மகனை முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துவிட்டு இந்த ஆண்டு முடிவில் ஒய்வு பெரும் மன நிலையில் இருக்கின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு கூடுதலாக ஒரு பெருமை கிடைத்தி ருக்கிறது.

IMRP எனும் சர்வதேச நிறுவனம் கடந்த பத்து வருடமாக இந்திய வர்த்தக நிறுவன தலைவர்களில் முதன்மையானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்தியாவின் சிறந்த முதன்மை செயளர்களை தேர்ந்தெடுக்கும் இந்த ஆய்வில் இன்ஃபொசிஸ் நாராயணமூர்த்தி முதல் சிறந்த முதன்மை செயல் அதிகாரியாக (CEO – Chief Executive Officer) இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த முகேஸ் அம்பானியை இரண்டாம் இடத்திற்க்குத் தள்ளி இதனை அடைந்துள்ளார்.

narayan-murthy5-young 382B3F8D41616E2095E746A31D80

இதில் அவர்கள் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முதன்மைசெயலர்கள், செயல் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்கள், பற்றிய ஆய்வின் முடிவாகவே இதனை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்களின் தலைமைப்பண்பு,பணித்திறன், பொருளாதார நடவடிக்கைகள்.மற்றும் சமுக அக்கறை அதன் தொடர்பான செயல்பாடுகள்.ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இப் பட்டியலில் 7 வது இடத்தில் இருக்கும் ஐ.சி.ஐ.சி வங்கியின் தலைமை அதிகாரி Chanda Kochhar முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே போல குமாரமங்கலம் பிரில்லா , அசிம் பிரேம்ஜி , அனில் அம்பானி. ஆனந்த மெஹெந்த்ரா போன்றவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். TCS சின் நடராஜ் சந்திரசேகர் இவர்களுக்கு அடுத்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே இந்த ஆய்வின் முதல் மூன்று ஆண்டுகளில் நாராயணமூர்த்தி இந்த பட்டியளில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Comments are closed.