முகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition) உருவாக்கலாம்

687

 628 total views

பொது கோரிக்கைகளுக்கு இணைய வழியில் ஆதரவு திரட்டி மனு அளிக்கும் (Online Petition) வசதியை முகநூல் (Facebook) இணையதளம் நாளை முதல் அமேரிக்கா முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

தற்போது இணையவெளியில் மனு உருவாக்க Change.org / Amnesty போன்ற இணைய தளங்கள் செயல்பட்டு வருகின்றன, இனி எவரும் எந்த ஒரு பொது கோரிக்கைக்காகவும் முகநூல் தளத்தின் உள்ளேயே ஒரு மனுவை உருவாக்கி ஆதரவாளர்களை பெருக்கிக்கிக்  கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒரு ஊரில் உள்ள ஒரு நபர் அந்த ஊர் சம்பத்தப்பட்ட ஒரு பொது கோரிக்கையை மனுவாக (இங்கு உள்ள பூங்காவில் குழந்தைகள் பாதுகாப்பு முதலுதவி பெட்டி வேண்டும்) ஏற்படுத்தலாம், அந்த மனுவிற்கு அந்த ஊரில் வசிக்கும் முகநூல் பயனர்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்க முடியும். இது போல இருப்பிட வரையறை இல்லாத சமூக, அரசியல், வாழ்வாதார,  கோரிக்கை மனுக்களும் இடம் பெற உள்ளன.
மீத்தேன் எடுக்கும் திட்டம் பற்றிய ஒரு மனுவை இங்கே பார்க்கலாம்.

ஒரு கோரிக்கையை ஆதரிப்போர் குழுவில் அதனை எதிர்ப்போர் சென்று தவறாக கம்மெண்ட் செய்வதை தடுக்க, நான் இந்த கோரிக்கையை எதிர்க்கிறேன் என ஒருவர் அவரின் பக்கத்தில் அறிவித்துவிட்டு அல்லது இந்த கோரிக்கைக்கு எதிரான மற்றொரு கோரிக்கையை முன்னெடுக்கிறேன் என இருப்போர் மட்டுமே பிற கோரிக்கை குழுவில் சென்று கம்மெண்ட் செய்ய முடியும்.  கோரிக்கை மனு வடிவமைக்கும் போது அரசியல் தலைவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். (தற்போது ட்ரம்ப் , பென்ஸ் ஆகிய இருவரையும் இணைக்க முடியாது). இது ஒரு வேளை முட்டாள்தனமான கோரிக்கைகளான “பூமி உருண்டை இல்லை, தட்டை வடிவம்) என சொல்லும் குழுக்களில், அரசியல் தலைவர்களை டேக் செய்து அவர்களை ஆதரவு தரவேண்டும் என கட்டாயபடுத்தி அவர்களை இக்கட்டான சூழலுக்கு இட்டு செல்லுமோ எனவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

முதலில் உள்ளூர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தரும் கோரிக்கைகளை மட்டுமே வெளியிட உள்ளதாகவும், நாளடைவில் கோரிக்கையின் தன்மை, ஆதரவாளர்களின் இருப்பிடம் தவிர்த்து பிற இடங்களில் இருக்கும் கோரிக்கைகளை ஆதரிப்பது போன்றவற்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் முகநூல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் முன்னரே, இதற்கு எதிரான கருத்துக்களும் வெளி வருகின்றன. ஒரு அரசியல், பொது நோக்க கோரிக்கையை ஆதரிக்கும் நபர்கள் யார் யார் அவர்களின் தனிப்பட்ட விவரம் என்ன, எனும் பட்டியலை அரசாங்கம் அறிந்துகொள்ள இது உதவலாம். அவர்களை அரசு கண்காணிக்க இது வித்திடும் என ஒரு சாரார் தெரிவிக்கிறார்கள்.

அனால், வெகுமக்களிடம் ஆதரவு இல்லாத கோரிக்கைகளை, நோக்கங்களை பொது வெளியில் ஆதரவு திரட்டி வலுப்படுத்த இது உதவும் என இதனை ஆதரிக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக பொது நோக்கம் கொண்ட செயல்களுக்கான வசதிகளை முகநூல் தளம் அறிமுகப்படுத்தி வருவதை நாம் கண்டு வருகிறோம்.

Community Help

இயற்கை பேரிடர் நடந்தால் பாதுகாப்பாக உள்ளதை அறிவிக்கும் வசதி,

TownHall

அமெரிக்க அரசு துறை அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளும் வசதி.

Candidate Info

அமெரிக்க தேர்தலில் பங்கெடுக்கும் வேட்பாளர்கள் மக்களிடம் உரையாடும், மக்கள் தங்கள் கேள்விகளை கேட்கும் வசதி.

Today In

நகரம், மாகாணம் வாரியாக உள்ளூர் தினசரி நடப்பு செய்திகளை தெரிவித்தல்.

You might also like

Comments are closed.