விண்டொஸ்க்கு போட்டியாக சீன அரசே தயாரிக்கும் புதிய OS

408

 1,811 total views

Google,Apple,Microsoft போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக இயங்குத்தளம் தயாரிக்கும் (operating system) பணியில் இறங்கி உள்ளது சீன அரசு.

அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திலேயே சீன கணிணி சந்தை இருப்பது சீனாவிற்க்கு பெரும் அச்சத்தை கொடுக்கிறது. இதனால் சீனா இணைய தகவல் தொடர்பு பாதுகாப்பு குறித்து அதிகமாக கவலைப்படவேண்டிய சூழல் இருப்பதால், அதைத் தவிர்க்க கணிணி இயக்குதளம் (operating system) ஒன்றை சீன அரசே தயாரித்து வருகிறது.

kybrd9807

வரும் அக்டோபரில் வெளியிட இருக்கும். இதில் app store போன்றவை பயன் படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தனி நபர்கணிணிகள் மட்டுமல்லாது கைபேசிகளிளும் இயங்கும் வகையில் இது வெளிவர இருக்கிறது.சீன அரசு அலுவலகங்கள் அரசுடன் தொடர்பில் உள்ள தனியார் நிறுவனங்கள் என அனைவரும் இதையே பயன் படுத்துவார்கள் எனத் தெரிகிறது.

புதிதாக வந்த விண்டோஸ் 8 OSஐ சீன அரசு தடை செய்து இருந்தது. இதனால் மைக்ரோசாப்ட்டிற்க்கு குறிப்பிட தகுந்த அளவு வருமான இழப்பு ஏற்ப்பட்டது. ஏற்கனவே சீனாவின் கைபேசி சந்தை முழுவதும் Googleவசம் இருபதால் கணினியும் மைக்ரோசாப்ட்டிற்க்கு அடிமையாவதை சீன அரசு விரும்பவில்லை. விண்டோஸ் 8க்கு அவர்கள் விதித்த தடைதான், உடனடியாக அதற்கு இணையான ஒரு இயங்குளத்தை தயாரிக்கும் தேவையை உருவாக்கியது. அதன் விளைவே இந்த முயற்சி.

40860875.cms

ஏற்கனவே எட்வர்ட் ஸ்னொடன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து சீனாவும் அமெரிக்காவும் இன்னும் மீள வில்லை, இத்தகைய சூழலில் கணினி துறையின் சுயச்சார்பின் அவசியத்தை சீனா உணர்ந்து செயல் படுகிறது.
இதன்முலம், எங்களால் உங்கள் பெரும் நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என்பதை அமெரிக்க அரசுக்கும், Google, Microsoft & Apple போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கும் சொல்ல முயல்கிறது சீனா.
ஒரு தேசம் என்பது எல்லாவகையிலும் சுயசார்பு உடையாதாக இருக்கவேண்டும். என்பதை சீனா உணர்ந்து பாதுக்காப்பை உறுதிபடுத்துகிறது.

_77158749_b9076888-0aba-47ed-9205-5f5dcfdba486

அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த போது, இந்திய அரசின் அனைத்து கணிணிகளிளும் Open Source Linux Operating Systemஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதுதான் நாட்டின் பாதுகாப்பிற்க்கு நல்லது என தெரிவித்தார். ஆனால் இன்றோ பாதுகாப்புத்துறையிலேயே பணம் இருக்கும் எந்த வெளிநாட்டுக் கம்பெனியும் முதலீடு செய்து கொள்ளலாம் என நாட்டின் பாதுகாப்பை வியாபரமாக மாற்றிவிட்டார் மோடி.

You might also like

Comments are closed.