Uber -இன் உணவு வழங்கும் செயலி தற்போது அமெரிக்காவில் முன்னோட்டம்:
625 total views
Uber என்பது உலகாளவிய முறையில் போக்குவரத்து ஓட்டுநர் சேவையை வழங்குவதிலுள்ள முன்னணி நிறுவனமாகும். இதன் வழியே Uber-இன் செயலியை மொபைலில் பதிவிறக்கி பயனர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை கூறினால் Uber பயனர்களின் இடத்திற்கு ஓட்டுனர்களை அனுப்பி வைத்து அவர்களது பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவு அளிக்கிறது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் இது போன்ற சேவையை 58 நாடுகளில், 300 நகரங்களில் கிடைக்குமாறு செய்யபட்டிருந்தது. அது முதல் இதனை போன்றே பல நிருவனங்களும் Uber ஓட்டுனர் சேவையை தொடங்க ஆரம்பித்தனர். அடுத்த கட்டமாக Uber செயலியில் ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு ஓட்டுனர் சேவையின் மூலமாக உணவினை எடுத்து சென்று வழங்கும் திட்டத்தினை இதில் அறிமுகபடுத்தியுள்ளனர். இது தற்போது அமெரிக்காவில் மிக முக்கிய பெருநகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூயார்க், ஆஸ்டின், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி, ஹூஸ்டன், சியாட்டில் மற்றும் டல்லாஸ் போன்ற நகரங்களில் அறிமுகபடுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட சில நகரங்களில் ஏற்கனவே Uber ஒட்டுனர் சேவை ஏற்கனவே பிரபலாமயிருந்த காரணத்தினால் இப்பகுதியிலிருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சேவையை அணுகுவது புதிதாக இருக்காது.
Uber-இன் இச்சேவை சந்தையில் வெற்றி பெற சாத்தியமில்லை என பல நிறுவனங்கள் குறை கூறினாலும் இதனை வெற்றிகரமாக்கும் வழியினை நோக்கி Uber சென்று கொண்டிருக்கிறது.
Comments are closed.