பேட்டரி திறனை சேமிக்கும் குரோமின் பிராட்லி அணுகுமுறை:
1,057 total views
கூகுல் குரோம் கடந்த செப்டம்பர் மாதம் பிராட்லி அணுகுமுறை(Algorithm) ஒன்றை அறிமுகபடுத்தியிருந்தது. பிராட்லி அணுகுமுறை என்பது குரோம் வலைதளத்தினை மிக வேகமாக இயங்க வைக்கும் ஒரு வழிமுறையே . மேலும் இதன் வழியாக நாம் உபயோகிக்கும் வலைதள பக்கங்களை மிகக் குறைந்த டேட்டாக்களில் தரும். இதனால் மொபைல் தளத்தில் ஒருவர் பிராட்லி அணுகுமுறையின் உதவியுடன் இணையத்தை அணுகும்போது குறைந்த அளவுகளில் டேட்டாக்கள் காட்டப்படுவதானால் பேட்டரி திறனும் டேட்டாக்களும் சேமிக்கப்படும். அதே சமயம் இணையத்தின் வலைப்பக்கங்களை அதிவேகமாக காண்பதற்கும் உதவுகின்றன. மற்றும் தரவுகளை 26 சதவிகிதம் வரை குறைத்துத் தருகிறது. தற்போது அணுகுமுறையை அமல்படுத்த தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த பிராட்லி அணுகுமுறை ஃபயர் ஃபாக்ஸ் உட்பட மற்ற இணைய உலவிகளிலும் அறிமுகபடுத்தப்படலாம்.
Comments are closed.