மூன்றாண்டு காலமாக யூ டியூபுக்கு விதித்து வந்த தடை நீக்கம்:

0 37

 இணைய உலகில் வீடியோக்களை பகிருவதில்   முன்னணி  நிறுவனமான  YouTube- ற்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசாங்கம்  திங்கட்கிழமையன்று  நீக்கியுள்ளது.    இஸ்லாம்  மதத்திற்கு எதிரான   வீடியோ காட்சிகளை 190மில்லியன் பாகிஸ்தான் மக்களால் பார்க்கப்பட்டு  அந்நாட்டு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்திய காரணத்தினால்  அந்நாட்டு அரசாங்கம் YouTube- ற்கு   தடை வித்திருந்தது.      YouTube- ற்கு  சொந்தக்காரரான  கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான  தனியாக ஒரு YouTube இணையதளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், YouTube இணையதளம் மீதான தடை இனிமேல் தேவையில்லை என்று பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைப்பு  தெரிவித்துள்ளது. மேலும்  இதில் இனி  ஒளிபரப்படும் காட்சிகளுக்கென தனியாக கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கூடவே  YouTube இணையம் தொடர்பான  விவகாரத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் கூகுள்  நிறுவனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் மற்றும் நடவடிக்கைகளை குறித்த செய்திகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என பாகிஸ்தானின் இணைய சுதந்திரத்திற்கான செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.2013ற்கு பிறகு தற்போது பாக்கிஸ்தான் மக்கள்   YouTube -யை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.   இது போன்ற வன்முறையை தூண்டும்  வீடியோக்கள்   YouTube-இல் இடம்பெறாத வண்ணம் கூடுதல்  கவனம் செலுத்தும்  என எதிர்பபார்க்கப்படுகிறது.

Related Posts

You might also like

Leave A Reply