கிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:

1,045

 1,527 total views

Uber என்பது அமெரிக்கா  மற்றும் பல பெருநகரங்களில்  மட்டுமே இதுவரை சாத்தியப்பட்டிருந்தது. அதாவது உபர் செயலியினை பதிவிறக்கி அதன் மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான  இடத்தினை பதிவு செய்து கூடவே  அதற்கான கட்டணத்தை செலுத்தினால் சில மணி நேரத்திற்குள் ஓட்டுநர் நம்மை  செல்ல வேண்டிய  இடத்திற்கு   இட்டுச் செல்வர் . இது முதல் இவை அமெரிக்கா , கலிபோர்னியா  போன்ற பெருநகரங்களில்    செயல்பட்டு வந்தது.  தற்போது  இது  இந்தியாவில் முக்கியமாக சில  நகரங்களான   நாக்பூர் , கொச்சி , கவுகாத்தி, மற்றும்  ஜோத்புர், போன்ற  பகுதிகளில்  அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது   இந்த சேவையில் எந்தவித கிரெடிட் கார்டோ அல்லது டெபிட் கார்டோ உபயோகிக்க வேண்டிய  அவசியமில்லை.  இதற்காக உபர் செயலியை பதிவிறக்க வேண்டிய அவசியமுமில்லை .

UberDial_Closeup

 

இணையத்தில்  dial.uber.com   வலைத்தளத்திற்கு சென்று  ஒரு முறை மொபைல் எண்ணினை கொண்டு பதிவு செய்த பின் நாம் பயணத்தை தொடங்கலாம்.  நாம்  சேர வேண்டிய இடத்தினை சென்று அடைந்த பின்பு பணம் செலுத்தினால்  போதும்.  இதனால்  ஒரு முழு செயலியை பதிவிறக்கும் வேலை இல்லாமலே எளிதில் வாகன சேவையை உபயோகிக்கலாம்  . மேலும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவைகள் இல்லாதவர்களும் நெட் பேங்கிங் போன்றவற்றை கையாள தெரிந்திராதவர்களுக்கும்  இது வசதியானது .  இது போன்ற அம்சங்களால்  கண்டிப்பாக  Ola போன்ற உள்நாட்டு  வாகன  சேவைகளுக்கு ஒரு போட்டியாக அமையும்.

You might also like

Comments are closed.