ஆதரவில்லாத குழந்தைகளுக்கு மொபைல் பயன்பாட்டின் மூலமாக உணவை தானம் செய்யலாம் :

454

 598 total views

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் தற்போது  நடைபெற்று வரும் அகதிகள் நெருக்கடி கொண்டு , சில தொழில் நுட்ப நிறுவனங்கள் மனிதாபிமான நோக்கோடு நிதி உதவிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெற்றி பிரச்சாரங்களை கட்டமைத்து ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) ஒரு மொபைல் பயன்பாட்டை அறிமுகபடுத்தியுள்ளது. அதன்படி ஆதரவில்லாமல் அகதிகளாக உள்ள குழந்தைகளுக்கு உணவினை அளிக்க உதவும் இந்த பயன்பாட்டிற்கு “உணவை பகிர் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த மொபைல் பயன்பாட்டினால் உணவினை ஆதரவில்லாத குழந்தைகளுடன் பகிருங்கள் .அது காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ இருந்தாலும் சரி பகிர்ந்து உண்ணலாம்.
Screen-Shot-2015-11-10-at-10.47.46-PM-272x400

உணவைப் பகிருவதில் உள்ள டிஜிட்டல் முறையால் பசியின்மையை உலகில் கொண்டு வரும் முயற்சியில் இருப்பது பாராட்டக்குரிய விசயமே ! உணவைப் பகிருகின்ற இந்த மொபைல் பயன்பாட்டில் நீங்கள் தானமாக உணவைப் பகிரலாம்.நீங்கள் எவ்வளவு பணம் செலுத்துகிறீர்களோ அதைப் பொறுத்து உணவும் பகிர்ந்தளிக்கப்படும் . உதாரணமாக $0.50 செலுத்தினால் அது ஒரு குழந்தையின் ஒரு நாளைக்கான முழு உணவையும் பகிர்ந்தளிக்கும் மற்றும் $3.00 செலுத்தினால் ஒரு வாரத்திற்கும் $12.00 செலுத்தினால் முழு மாதத்திற்கும் உணவளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் உலகம் முழுவதுமுள்ள மக்கள் உணவை பகிருவதை ஒரு கூட்டு செயலாக மாற்றும் என உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் எர்தரின் கஸின் கூறினார். இந்த பங்களிப்புகள் ஜோர்டானில் உள்ள சீரியன் அகதி குழந்தைகளுக்கு போய்ச் சேரும் .இந்த குறிப்பிட்ட பிரச்சாரத்தினால் முகாம்களில் உள்ள அகதிகளில் ஏறத்தாழ 20000 சிரிய குழந்தைகளுக்கு ஒரு ஆண்டுக்கு உணவு வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அன்றாட உணவினைப் பெறுவது பற்றிய எந்த கவலையுமின்றி கற்க தொடங்கலாம் .

 

இந்த உணவைப் பகிரும் திட்டம் 2014லிருந்தே தொடங்கப்பட்டது. தற்போது உலகளாவிய அளவில் விரிவுபடுத்தக் காரணமே பசியின்மையை உருவாக்குவதேயாகும். ஏனெனில் உலகில் ஒன்பதில் ஒருவருக்கு உணவு கிடைக்காமலிருப்பதே காரணம். நாம் பல தேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்துகிறோம் . ஆனால் இந்த மாதிரியான தேவைகளுக்கு ஏற்ற மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துவதால் சமூகத்தை ஒரு படி முன்னேற்றி கொண்டு போகும் என நம்பலாம்.

இந்த சோதனையை முன்னதாக ஜெர்மனி , ஆஸ்ட்ரியா ,ஜெர்மனி , சுவிட்சர்லாந்தில் உலவவிட்ட போது 1,20,0000 மக்கள் சேர்ந்து 1.7 மில்லியனுக்கும் மேலான குழந்தைகளுக்கு தினசரி உணவை வழங்கியுள்ளனர். இதனால் சமீப காலமாக கூகுள் , ஆப்பிள் முகநூல் போன்ற சமூக வலை தளங்களும் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த உணவைப் பகிரும் பயன்பாடு தற்போது ios & அன்ட்ராய்டு சாதனத்திலும் கிடைக்கிறது.அதனால் இந்த மாதிரியான பயன்பாடுகளுக்கு ஆதரவளித்து நாட்டில் பசியின்மையை கொண்டு வர பாடுபடுவோம் வாசகர்களே!.

You might also like

Comments are closed.