இசையைப் பயிற்றுவிக்கும் ஐபோன்:

15

இசை என்ற ஒரு கலையை ஆரம்ப காலத்தில் குருகுலத்தில் சென்று கற்றனர்.அதன் பின் இசைப் பள்ளியையோ அல்லது நிருவனத்தையோ தேடி பயின்று வந்தனர் . ஆனால் தற்போது எந்த இசைப் பள்ளிக்கும் செல்ல வேண்டியதில்லை . இசையின் மீது ஆர்வம் இருந்தால் மட்டுமே போதுமானது.இசையை ஐபோன் சாதனத்தின் மூலம் நமது கையிலேயே பெறலாம் .இந்த கையடக்க இசைக் கருவியை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.குழப்பமாக  இருக்கிறதா ? ஓபன் லேப் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள இந்த ஸ்டேஜ் லைட் பயன்பாட்டின் மூலம் இசையை ஒவ்வொரு படியாக கற்கலாம்.இதற்காக எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக உங்கள் ஐபோனில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த ஸ்டேஜ் லைட்டை உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் ஒரு மேடையாக பார்த்தால் இசையைப் பற்றிய அதிக தகவல்களை கற்றுக் கொள்ளலாம்.

stagelight-android கூடவே இதில் கற்க எளிதாக பல வகை மாதிரிகளும் கூடுதல் சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை உங்கள் மொபைலில் இந்த பயன்பாட்டை அணுக சிரமமாக இருந்தால் இந்த ஸ்டேஜ் லைட்டைஇசைக் கருவிகளோடு இணைத்து கற்கலாம். இதுவரை வெளியான இசைக் கருவிகளிலிருந்து இந்த பயன்பாடு சற்று மாறுபட்டே காணப்படும்.இதில் அடிப்படியான இசைத் தொகுப்புகளும் மேலும் அதை எப்படி கூடுதல் மெருகூட்டலாம் என்ற வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.இசைப் பிரியர்களை பொருத்தவரையில் இது ஒரு நல்ல தகவலே !

 

ஏனெனில் இசைச் சாதனங்களை தனியாக வாங்காமல் ஐபோனிலே பெறுவதென்பது சாதாரன விசயமன்று . இதற்கு முன் வெளிவந்த  இசை சமந்தப்பட்ட பயன்பாடுகள் அனைத்தும் இசையை எடிட் செய்வது போன்ற சில அம்சங்களை மட்டுமே கொண்டிருந்தன .ஆனால் ஓபன் லேப் நிறுவனத்தின் காரேஜ் பேண்ட் பயன்பாட்டின் மூலம் இசையைக் கலந்து பல டிராக்குகளுடன் இணைக்கவும் மேலும் கூடுதலாக பல இசைப் பிரபலர்கள் பாடிய பாடல்களையும் தருகிறது . மேலும் ஒருவர் அமைத்த இசையை பதிவேற்றவும் ,டிராக்குகளை சேமிக்கவும் $10 முதல் $100 வரை கட்டண சேவையோடு வழங்கப்படுகிறது.

You might also like