இனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்!!

466

 1,864 total views,  2 views today

உங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க    இதோ வந்துவிட்டது பில் ஆப். என்ன  செய்யும் இந்த பில்  செயலி (ஆப்)? ஆம், இந்த அன்றாய்டு  மோகம் நிறைந்த  நவீன உலகில்  என்னதான் நாளுக்கு நாள் பற்பல அன்றாய்டு  செயலிகள் வந்து கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும்  பொழுதுபோக்கு நோக்காகவே பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் சில   செயலிகள்  மட்டுமே நமது அன்றாட  வாழ்வில் பயன்படுத்தும்படியாக அமைகிறது. அப்படிப்பட்ட   செயலிகளில் ஒன்றுதான் இந்த பில் ஆப்.

 என்ன செய்யும் இந்த செயலி? 
                        பேருக்கு ஏற்றார் போலவே இது ஒரு பில் ஆப் தான்.   இதன் மூலம் நீங்கள் அடிக்கடி வாங்கும்   எலெக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட வீட்டு  உபகரணப் பொருட்களின் பில்களை கிளவுட் சேமிப்பில்  இலவசமாக சேமித்து வைத்து உங்களது பில்  காலாவதி ஆகும்  நாட்களுக்கு முன்னரே பயனர்களுக்கு நினைவுறுத்துகிறது.  இதனால் அடிக்கடி வாரண்ட்டி  பேப்பர் எங்கிருக்கிறது என்று தேடி அழைய வேண்டாம்.
  எப்படி இன்ஸ்டால் செய்வது?
            உங்களது வாரண்ட்டி  பில்களை  போட்டோ எடுத்து பில் ஆப்பில் ஸ்டோர் செய்த பின்  அதனைத் தொடர்ந்து   இது உங்களது பில்களைப்  பற்றிய காலாவதி நாட்கள் போன்ற விவரங்களை கேட்டு சேமித்து வைத்துக் கொள்ளும். இதனை  பத்திரமாக கிளவுட் சேமிப்பில் சேமித்து  வைத்து தேவைப்படும் நேரங்களில்  உங்களுக்கு தருகிறது. மேலும் இதிலுள்ள  நான்கு  இலக்க எண்ணினை  சேர் செய்து  கொள்வதன் மூலமாக  உங்கள்  நண்பர்கள்  மற்றும் குடும்ப  உறுப்பினர்களிடையேயும்   பில் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.   இது அன்றாடம்  வீட்டு சுமைகள்  அனைத்தையும்  சுமக்கும்  குடும்பஸ்தர்களுக்கும்   மிகவும் கை கொடுக்கும்.
  BillApp- screenshot     BillApp- screenshot
கூடவே  இந்த பில்களை பற்றிய விவரங்களை உங்களது ஜிமெயில், பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகளிலும் பகிர்ந்து கொள்ளலாம்.இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால்  ஒரு முறை நீங்கள் இன்ஸ்டால் மற்றும் லாகின் செய்யும் போது  மட்டுமே இன்டர்நெட் தேவைப்படும். அதன் பின் அனைத்து நேரத்திலும் இன்டர்நெட் கனெக்சன்  இல்லாமலே  பில்  ஆப்பைப் முற்றிலும் இலவசமாகப் பெற முடியும். இதனை  அன்ட்றாய்டு  பயனர்களுக்கென  தற்போது தயாரித்துள்ளனர். கூடிய விரைவில் ios  பயனர்களுக்கும் கிடைக்கும்படி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை உங்கள் பிளே ஸ்டோரிலே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You might also like

Comments are closed.