கல்வி சம்மந்தப்பட்ட மொபைல் பயன்பாடுகள்:

472

 709 total views

புதுதில்லியின் மனித வள மேம்பாட்டு அமைச்சரான ஸ்மிரிதி இர்ராணி டிஜிட்டல் இந்தியாவின் ஒரு திட்டமாக பற்பல கல்விக்கு உதவும் வகையிலான மொபைல் பயன்பாடுகள் பலவற்றை வெளியிட்டுள்ளது.இந்த பயன்பாடுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் நடவடிக்கைகளான தேர்வுகள் மற்றும் மாற்றப்பட்ட பாடத்திட்டங்களுக்கு நடுவேயான மன அழுத்தங்களை குறைக்கும் விதமாக இந்த பயன்பாடுகள் களமிறக்கியுள்ளனர். இந்த நிகழ்வினை ஆசிரியர்களும் மாணவர்களும் அமைச்சர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .

இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணையத்தின் இ -பாத்சாலா வாயிலாக மாணவர்கள் அவர்களின் படிப்பு சம்மந்தமான பொருள்களை இணையத்தின் வாயிலாக பெறும் புதிய அம்சத்தை அறிமுகபடுத்தியுள்ளது .இந்த பயன்பாடு அன்றாய்டு மற்றும் விண்டோஸ் , அன்றாயுடு , ios பயனர்களிடையே பயன்படுத்தப்பட உள்ளது.

இதில் ஆங்கிலம், ஹிந்தி ,உருது போன்ற பாடப் புத்தகங்களும் அடங்கும் .கடந்த வருடம் அரசாங்கம் இ​​ -பாஸ்டா என்ற ஒரு தளத்தினையும் அறிமுகபடுத்தி அதன் வாயிலாகவும் பல வெளியீட்டாளர்கள் , பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் ஒன்றாக கலந்துரையாடும் கூட்டு மேம்பாட்டு தளத்தை அறிமுகபடுத்தினார்.

eBasta-Web-portal
கல்வியிலேயே கூடுதலாக ஒரு அந்நிய தொழில்நுட்பத்தை கொண்டு வராமல் வெளிப்படைத் தூண்டுதலாக கல்வி திட்டத்தில் குழந்தைகளிடையே ஒரு புதிய தொழில் நுட்பத்தை கற்க வைக்கும் நோக்கத்திலே இந்த மாதிரியான தளங்கள் உருவாகின்றன என ஸிம்ரித் இராணி கூறினார்.

இதனால் குழந்தைகளின் படிப்பு தொடர்பான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் அல்லது வருகை பதிவையும் பெற்றோர்கள் அறிய வாய்ப்பாக அமையும்.மனித வள மேம்பாட்டு அமைச்சர் “சரனஷ் ” என்ற மற்றொரு தளத்தையும் அறிமுகபடுத்தியுள்ளனர். இந்த “சரனஷ் ” தளத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முக்கிய செயல்திறனை மாவட்ட , மாநிலம் மற்றும் தேசிய அளவிலான முக்கிய பாடங்களுடன் ஒப்பிட்டு அறியலாம். இதுவும் மாணவர்களிடையே ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமையலாம்.

மாணவர்கள் மீதான தேர்வு பாட சுமையை குறைக்க மேலும் பல திட்டங்களுடன் கூடிய தளத்தை பல மாநிலங்களுக்கு அடுத்த வருடத்திற்குள் தர அறிவித்துள்ளனர்.இந்த மாதிரியான திட்டங்களால் மாணவர்களுக்குள் இருக்கும் சுமையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் மாணவர்கள் அவர்களின் திறமையையும் குறிக்கோளையும் கொண்டு அவர்களது ஒட்டு மொத்த ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக இருக்கும்.  இது மாதிரியான கல்வி சமந்தப்பட்டவலைதளங்களும் உருவாக்கப்படுவது அனைத்து கல்வி நிருவனங்களுக்கும் இதே மாதிரியான எண்ணங்கள் உருவாக ஒரு பாதையாக இருக்கும் .

You might also like

Comments are closed.