கூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:
1,820 total views
கூகுள் மே மாதம் டெவலப்பர் கான்பிரான்ஸ்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த DUO செயலியினை இன்று பயனர்கள் மத்தியில் முதல் முறையாக கொண்டுவந்துள்ளது. இது ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஒ.ஸ் போன்ற சாதனங்களுக்கு சப்போர்ட் செய்கிறது. கண்டிப்பாக மற்ற வீடியோ கால்களை விட ஒருபடி கூடுதல் செயல்களைக் கொண்டுள்ளது. இது “KNOCK KNOCK ” செயலி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது இது ஒருவர் கதவை தட்டும் போது முன்ஜாக்கிரதையாக யாரென்று பார்த்த பின்பு கதவை திறப்பதை போன்ற ஒரு சிறிய நுணுக்கத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது வீடியோ காலிங்கில் ஒருவர் அழைப்பு வரும்போது கூடவே எதிர் முனையில் இருப்பவரை நேரடியாக வீடியோ காலிங்கில் காணலாம். இதனால் ஒருவர் தேவையான கால்களுக்கு உடனுக்குடனும் தேவையற்ற கால்களை நிராகரிக்கவும் முடியும். மேலும் வீடியோ காலிங்கில் ஒருவரின் இணைப்பின் வேகத்தை பொறுத்து வீடியோவின் ரிசொலூஷனையும் தானாகவே அட்ஜஸ்ட் செய்கிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் உலகளவில் இந்த செயலி அனைவரின் மத்தியிலும் கிடைக்கும் என கூகுள் குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Comments are closed.