மொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி?
4,632 total views
படி 1:
மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளிகளை தொடவும்.
படி 2:
அதை தொடர்ந்து வரும் option- களில் உள்ள “Print ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 3:
பின் ” Select Printer ” ஐ தேர்ந்தெடுக்கவும்.
படி 4 :
பின் “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 5:
அதில் “save ” ஐகானை தேர்ந்தெடுக்கவும்.
படி 5:
பின் எங்கு “Save” செய்ய நினைக்கிறோமோ அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக பேருந்து, தொடர் வண்டி மற்றும் ஆகாய வழி பயணங்களின் போது பயண சீட்டின் வழியே பயணித்த காலம் போய் இன்று அனைத்தும் தொழில்நுட்பமயமாகி விட்ட காலத்தில் அனைவரும் டிக்கெட்டுகளை “Soft Copy ” ஆக மொபைலில் சேமித்து வைத்தல் வைத்தே பயணிக்கின்றனர் . அது போன்ற வேளைகளில் டிக்கெட்டுகளை pdf கோப்புகளாக சேமித்து வைத்தால் இணையமில்லாத நேரத்தில் கூட அணுகலாம். மற்றும் வலை பக்கங்களை “screen shot ” கள் எடுப்பதற்கு பதில் மேல்கூறியவாறு pdf களாக மாற்றினால் இணையமில்லா சமயத்தில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
Comments are closed.