ஓவியம் வரைவதற்கு மென்பொருள்
1,633 total views
கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான brushes கொடுக்கப்பட்டுள்ளன.
Photoshop போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள Blur, Sharpness, Burn, Smudge டூல்களும் லேயர் வசதியும் இதில் உள்ளது.
எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்க முடியும்.
மென்பொருள் பதிவிறக்கம் செய்ய – http://www.smoothdraw.com/
Comments are closed.