திருக்குறளில் இரண்டு மற்றும் மூன்றாம் எண்கள்.

0 82
இந்த உலகத்தில் ஒப்பற்றது மனிதன் ஈட்டுகின்ற இணையில்லாத புகழ்.  அப்புகழுக்கு ஒன்றைத் தவிர இவ்வுலகில் எஞ்சுவது வேறில்லை.
இரண்டு என்னும் எண் இருபொருளை ஒபபுமைபடுத்தவும், சில பொருட்களை வேறுபடுத்திக் காட்டவும் உதவுகின்றது. மேலும் வடமொழியில்  ஒருமை, இருமை, பன்மை என்ற வழக்கும் உண்டு. தமிழிலக்கியத்தில் இரட்டைக் காப்பியம் என்பது உலகப் புகழ் பெற்றது. சங்க இலக்கியத்தை அறிந்தவர்கள் ” இரட்டைப்புலவர்களை “ அறியாமல் இருக்க முடியாது. விரித்துரைப்பின் இரண்டின் சிறப்பு இயம்பற்கரியது.
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு ( நீத்தார் பெருமை 23 )
நன்மை, தீமை என்கின்ற குணங்களை ஆய்ந்தறிந்து நன்றின்பால் உய்க்கும் அறிவுடைய சான்றோரால் உலகம் நிலைபெற்றுள்ளது.
கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர் ( கல்வி 393 )
அவ்வுலகம் நிலைபெற்றிருக்க அடிப்படைத் தேவை கல்வி, அக்கல்வியைக் கற்றவர் முகத்தில் இருப்பது கண்கள். கல்லாதவர் முகத்தில் இருப்பது இரு புண்களே என்கிறார்.
மூன்றாம் எண் தொடர்ச்சி:

மூன்று என்னும் எண் மும்மூர்த்திகள், முத்தேவியர் ஆகியவற்றையும், உலகத்தின் இயக்கமாகிய முத்தொழிலையும் ( படைத்தல், காத்தல், அழித்தல் ) குறிக்கின்றது. சமூகத்தின் நடமாடும் தெய்வமாகிய ” அன்னை ” என்பதும் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற ” கல்வி ” என்னும் திறவுகோலைத் தருகின்ற “ஆசான் ” என்பதும்  மூன்று எழுத்துக்களால் ஆன சொற்களே. இதை வள்ளுவர்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை 41 )
இல்லத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் ஆசிரியரிடம் கல்வி கற்று ஒதுபவனும், பிரமச்சரிய ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவனும் முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தின் பாற்பட்டவனும் ஆகிய இவர்கள் நல்லாற்றின் நின்ற துணையாகக் கருதப்படுவார்கள்.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் ( மெய்ப்புணர்தல் 360௦ )
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இம்மூன்று குற்றங்களை நீக்கி வாழ்ந்தால் துன்பங்கள் வராமல் போகும். அவ்வாறு துன்பத்தை நீக்கினால் ஒப்பற்ற பரம்பொருளை உய்த்துணரும் ஆற்றல் கிட்டும்.
நான்காம் எண்ணின் சிறப்பு அடுத்த வாரம்.
ச.  சித்ரா

Related Posts

You might also like

Leave A Reply