ஹாப்பி பொங்கல்… கவித.. கவித..
2,550 total views
நாலு நாலு லீவு
ஹாப்பி பொங்கல்…
விவசாயி வீட்டில இழவு
ஹாப்பி பொங்கல்…
ஒரு செடியக்கூட நட்டதில்ல
ஹாப்பி பொங்கல்…
வயல ரசிச்சு பார்த்ததில்ல
ஹாப்பி பொங்கல்…
சாக்கட-ஹைவே தானே ஆறு
ஹாப்பி பொங்கல்…
கள்ளு இறக்க விட்டதில்ல
ஹாப்பி பொங்கல்….
இளனிக்கு கேட்ட காச குடுத்ததில்ல
ஹாப்பி பொங்கல்…
பஸ்ஸுல மூட்டைகள ஏத்தவிடல
ஹாப்பி பொங்கல்…
காட்டுப் பசிக்கும் KFCதான்
ஹாப்பி பொங்கல்…
நான் எழுதுன முதல் கவித, பாட்டு.. ? இது என்ன ரகம்னு தெரியல..
– கார்த்திக்.
Comments are closed.