பேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :
983 total views
பெரும்பாலும் படபிடிப்பு நேரங்களில் நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில் உயிரோட்டமில்லாமல் போய் விடும் . அதனால் முந்தைய முறை அமைந்ததைப் போன்ற முக பாவனைகளை கொண்டு வர இயக்குனர்கள் அதிக உழைப்புகளை கொடுக்க வேண்டியிருக்கும். நடிகர் நடிகைகளும் இயக்குனரின் கட்டளைக்கிணங்க பல நூறு முறை நடித்து காட்டுவார்கள். நடிகர்கள் எப்படி முயற்சி செய்தாலும் இயக்குனருக்கு மனதிருப்தி இல்லாமல் போய் விடும். அதற்காகவே டிஸ்னி ஆராய்ச்சி மற்றும் சர்ரே பல்கலைக்கழகத்தினர் இணைந்து பேஸ் டைரக்டர் என்ற ஒரு புதிய வகை அமைப்பினை கொண்டு வந்துள்ளனர்.
பேஸ் டைரக்டர் உதவி கொண்டு பல்வேறுபட்ட காட்சிகளிலிருந்து ஒரு இயக்குனர் விரும்பிய காட்சியின் சரியான விளைவை எடுத்துக் கொள்ள வழி செய்கிறது. இதனால் இயக்குனர்கள் ஒரு காட்சியை மீண்டும் படம்பிடிக்கும் அவசியமில்லை . அதோடு பிலிம் ரோல்களும் வீணடிக்கப்படுவதில்லை. நடிகர்களின் நேரங்களும் வீணாகாமல் மிச்சப்படுத்தலாம்,
பேஸ் டைரக்டரில் பல்வேறு, நெருக்கமான மற்றும் இடைப்பட்ட காட்சிகளில் நடிகர்களின் பாவனைகளில் சிறந்த பதிப்புகளை உருவாக்க முடியும். அதாவது பயிற்சியின்போது நடக்கும் நிகழ்வுகளினை ஒரு சாதாரண வீடியோக்களில் பதிவு செய்து பின் அந்த காட்சிகளை பேஸ் டைரக்டர் வழியாக பாவனைகளைப் பற்றிய ஒரு ஒருங்கிணைப்பைக் கணினியில் கொடுத்து சிறந்த காட்சிகள் என்று கருதும் நிகழ்வுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதற்கு சாதாரன 2-டி வீடியோக்களே போதுமானது . மேலும் இவற்றில் சோக காட்சிகளுக்கு நகைச்சுவையாக பேசுவது போன்ற நுட்பங்ளையும் சேர்த்துள்ளனர். இதனால் பணமும் நேரமும் சேமிக்கபடுகிறது. பணத்தைமிச்சப்படுத்தும் இந்த அமைப்பு கண்டிப்பாக அதிக விளையுள்ளதாகவே நிர்ணயித்துள்ளனர். இவை இயக்குனர்களுக்கு திரைப்பட துறையில் புது வித காட்சிகளை உருவாக்க கை கொடுக்கும். மேலும் இயல்பான காட்சிகளையோ அல்லது தத்ரூபமான காட்சிகளையோ படம் பிடிக்க விரும்பினால் இவை கண்டிப்பாக உதவும்.
Comments are closed.