ஹெலிகாப்டரில் சவாரி செய்ய தயாராகுங்கள்……………!

இணையம் வழி வர்த்தகம் மேற்கொள்வதில்   சிறந்த இந்திய வர்த்தக இணைய தள நிறுவனமான  Uber    விரைவில்  ஹெலிகாப்டர் சேவையை   அனைவருக்கும் வழங்கவுள்ளது.ஆம்  Uber தற்போது ஐரோப்பிய விமான நிறுவனமான ஏர்பஸ்ஸூடன்  கூட்டு சேர்ந்துள்ளது.இதன்மூலம் கால் டாக்சிகளை எப்படி புக் செய்து சவாரி செய்கிறோமோ  அதுபோலவே ஹெலிகாப்டர்களையும் புக் செய்து சவாரி செய்யும் புதிய முறையை சோதித்து வருகின்றனர்.இந்த பைலட் திட்டத்தினை இதுவரை சோதனை ஓட்டத்திலேயே முயன்று வருகின்றனர்.  கண்டிப்பாக ஆகாயத்தில் நம்மை   பறக்க வைக்கும்  இந்த விமான சவாரிக்கு  பல ஆயிரம் டாலர்களை ஈடாக கொடுக்க வேண்டியிருக்கும்.  இதற்குமுன் உபர்  இதுபோன்ற விமான சேவைகளை கொண்டிருந்தாலும் அவையாவும் நிரந்தரமான சேவையை கொண்டிருக்கவில்லை .சாதரணமாக உபரின் மூலம்  நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடங்களுக்கு உங்களை  காரில்  அழைத்துச் செல்லும்.  தற்போது இதனையே சற்று மாறாக  நம்மை வானில் பறக்க வைக்க முயற்சி செய்து வருகிறது.    இந்த முயற்சிக்கு ஐரோப்பிய விமான நிறுவனமான  ஏர்பஸ்ஸூடன்  கூட்டு சேர்ந்துள்ளது உபருக்கு மிகப் பெரிய பலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு நிறுவனத்தின் கூட்டு கண்டிப்பாக நமக்கு பெரிய கண்டுபிடிப்பை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும் சவாரிகளைப் பொருத்தவரையில்   விலை மலிவாகவும் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் அமைந்தால் இந்தியாவைப் பொருத்தவரையில்  இந்த முயற்சி நடைமுறைக்கு  வரும்போது  பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்

Related Posts

Leave a Reply