717 total views
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் மூலம் பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியா அருகேயுள்ள வான்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் செயற்கைக்கோளை சுமந்தபடி திட்டமிட்ட இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணில் இருந்து கீழே விழும் ராக்கெட்டை, கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்த ஒரு மிதவையில் விழச் செய்து அதை மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு “ஜேசன்-3″செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவினாலும் அதனை தரையிரக்குவதில் தோல்வியைத் தழுவினர். அதாவது விண்ணில் இருந்து கீழே விழும் ராக்கெட்டை, புளோரிடாவின் கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்த ஒரு மிதவையில் விழச் செய்து அதை மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. திட்
சுமார் 14 மாடிக் கட்டிட உயரம் இருக்கும் ராக்கெட் நொடிக்கு ஒரு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது அதை கட்டுப்படுத்துவது என்பது, பயங்கரமான சூறாவளிக்காற்றில் ரப்பரால் செய்யப்பட்ட துடைப்பத்தை நேராக நிமிர்த்திப்பிடிப்பது போல் மிகவும் கடினமான செயல் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த தோல்வி ராக்கெட்டின் வேகம் அதிகரித்ததனால் மிதவை உடைந்து போனது ஏமாற்றத்தை தந்தாலும் இது முதல் சோதனை முயற்சியே , இதனால் ஸ்பேஸ் எக்ஸ் அடுத்த கட்டமாக இந்த முயற்சியில் வெற்றி காணும் வரை தொடர்ந்து சோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். மேலும் இதுபோன்ற சோதனைகளை இந்த வருடத்திற்குள் 3 அல்லது 4 முறை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த வெள்ளிக் கிழமை நடந்த ஊடக சந்திப்பில் ஸ்பேஸ் எக்ஸின் துணைத் தலைவர் ஹான்ஸ் கோன்ஸ்மான் தெரிவித்திருந்தார். அதன்படியே அடுத்த கட்ட முயற்சியாக ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்து தற்போது வின்னி செலுத்தியுள்ளது.வரும் 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத் தயாரிப்பான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளின் ‘டிராகன் கேப்ஸ்யூல்கள்’ மூலமாக நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு அனுப்ப முடிவு எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட்டை பத்திரமாக கடலில் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் ராக்கெட்டினை மீட்டெடுத்து பயன்படுத்தினால் பல கோடிக் கணக்கான சொத்துகள் சேமிக்கப்டலாம்.செயற்கைக் கோள்களை ஏவப் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுக்களை மீண்டும் பயன்படுத்தும் நிலை உருவானால், அதன் காரணமாக செயற்கைக் கோள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கும், விண்வெளிப் பயணங்களுக்கும் ஏற்படும் செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.