லைன் சாட்டின் உதவியுடன் பிடித்த பொருளை நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் :

லைன் பயன்பாடு என்பது   இணையத்தில் நமக்கு  விருப்பமான  பொருள்களை தேர்ந்தெடுத்து   அன்பளிப்பாக நண்பர்களுக்கு   அனுப்பி வைப்பதாகும்.   இந்த சேவை முதலில்   தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட  30 மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே   துவங்கப்பட்டது. இந்நிறுவனம் இது போன்ற பல சேவைகளை தாய்லாந்தில் துவக்கியுள்ளது . குறிப்பாக இதற்கு முன்  $2 செலுத்தி  யூ-டியூபின் இசை சேவையை பெறச் செய்த நுட்பத்தினால் பல மடங்கு வருவாயை  குவித்தது.  தற்போது  லைன் சாட் அதன் வருவாயை உயர்த்த எண்ணி  அதிக மக்கள் தொகை உள்ள  இடங்களான  ஜப்பான் ,தாய்வான் , இந்தோனேசியா  போன்ற நாடுகளிலும்  அறிமுகபடுத்த உள்ளது . இதனை   212  மில்லியன்  மக்களில் மூன்றில் இரண்டு பயனர்களை  குறி வைத்து  அறிமுகபடுத்தியுள்ளனர்.

line-gift-store
இதற்கு முன்  லைன் சாட்டில் பயனர்கள் நண்பர்களுக்கு டிஜிட்டல்  ஸ்டிக்கர்களை மட்டுமே அனுப்பி கொள்ளுமாறு வசதிகள் செய்யபட்டிருந்தது  .ஆனால் தற்போது கூடுதலாக   நண்பருக்கு  ஒரு திரைப்பட டிக்கெட்டுகளையோ அல்லது  தேநீரையோ அல்லது நீங்கள் விருப்பட்ட  பொருள்களை  அவர்களுக்கு  பரிசளித்து அனுப்பலாம்(அசத்தலாம் ). இவையனைத்ததும் லைன்  சாட்டின் சேவை வரிகளை செலுத்தி பயன்   பெறலாம்.
இதில் மனதில் ஓங்கி நிற்கும் கேள்வி  என்னவென்றால்  இதே போன்றே டேங்கோ என்ற பயன்பாட்டினை இதற்கு முன்  அமெரிக்காவில்  தொடங்கிய  போது அது எதிர்பாராத விதமாக தோல்வியைத் தந்தததே!  என்னதான் இருந்தாலும் லைன் சாட்டின் இந்த பயன்பாடு   மலிவான விலையில் மக்களை  தங்கள் சேவை  வரியினை செலுத்தி மாதாந்திர முறையில்  அடிக்கடி  பொருள்களை   வாங்கச் செய்வதையே  இலக்காக கொண்டுள்ளது.மேலும் கூடுதலாக இதற்காக தள்ளுபடி போன்றவற்றையும் வழங்குவிருக்கின்றது .இதனால்   மற்ற பயன்பாட்டினைப் போலல்லாமல்   லைன் சாட்  வருவாயில் அதிக லாபத்தை ஈட்டும்  வாய்ப்பு அதிகம் உள்ளது .

Related Posts

Leave a Reply