655 total views
2017 ல் இந்தியாவில் டிஜிட்டல் வணிக சந்தை $28 பில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அளவுக்கதிகமான மொபைல் சாதனங்களின் வரவாலும் விற்பனையாலும் மேலும் பயனர்கள் அதிகமாக இணையத்தை ஊடுருவுவதாலும் டிஜிட்டல் சந்தையில் $42 பில்லியனாக உள்ள அதன் வளர்ச்சி 2017-ல் $128 பில்லியனைத் தொட உள்ளது.
சமீபகாலமாக மொபைல் சாதனங்களின் மேடையில் மக்களைக் கவரக் கூடிய விதத்தில் விதவிதமான மொபைல்களும் மற்றும் மலிவான விலைகளிலும் தள்ளுபடி போன்றவற்றையும் வழங்கி மக்களை மின்னணு வணிகவியல் தளத்தில் தள்ளியதே இதற்கு முக்கிய காரணமாகும்.
2014 செப்டம்பர் வரை 235 மில்லியன் பயனர்கள் என்ற கணக்கிடப்பட்ட நிலையில் அதன்பின் பயனர்களின் வளர்ச்சி வேகமாக உயர ஆரம்பித்துவிட்டது. குறிப்பிடத்தக்க கால அளவுகளில் அதிகளவிலான மக்கள் இணையத்தை அணுகி கொண்டிருப்பதே இதற்கு காரணம்.
2013ல் இந்தியாவில் இணையதள மின்னணு கடைக்காரர்கள் 20மில்லியன் மக்கள் பங்கு பெற்றிருந்த நிலையில் தற்போது 2016 ல் 40மில்லியனையும் தாண்டி எதிர்பார்க்கின்றனர். மேலும் கூடுதலாக 200 மில்லியன் இந்தியர்கள்,அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்கள் வழியாக இணையத்தை அணுகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் அறிவித்துள்ளனர்.
என்னதான் இருந்தாலும் மின்னணு சார்ந்த வணிகத்தை இந்தியா போன்ற பரந்த நாட்டின்கண் விரிவுப்படுத்துவது சிக்கலான ஒன்றே. ஏனெனில் இன்னும் பல வளர்ச்சியடையாத நிர்வகிக்க சிக்கலான கிராமபுறங்களும் இருப்பதனால் அந்த மாதிரியான பகுதிகளில் இணையம் என்பது புதிதான ஒன்றே! வரும் ஆண்டுகளில் உள்நாட்டு சந்தையிலாளர்கள் நிச்சயமாக அவர்களின் துறை முதலீட்டார்களின் நம்பிக்கையை பாதுகாக்க பல்வேறு அளவீடுகளை கையாள வேண்டியிருக்கும். வரவிருக்கும் ஆண்டுகளில் களமிறங்க உள்ள தானியங்கு கார்கள், 3D நுட்பங்கள்,மேம்படுத்தப்பட்ட சமூக வலை தளங்கள் போன்றவைகளால் மின்னனு வாணிகம் மேலும் எதிர்பாராததாக அமையும்என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.