உங்கள் வாகனத்தை பழுது பார்க்கும் ஸ்மார்ட் போன்கள்:
906 total views
உங்கள் வாகனம் திடீரென பழுதடைந்து விட்டால் அதனை சரி செய்ய வழக்கமாக என்ன செய்வீர்கள் ? கடைக்கு சென்று வாகனத்தை ஒப்படைத்துவிட்டு அதன் பின் அதிலுள்ள பழுதடைந்த பகுதிகளுக்கு பதில் வேறொரு பாகத்தை மாற்றி பின் அதனை சரி செய்து வாகனத்தை திரும்பி பெறுவீர்கள். இந்த அனைத்து வேலைகளையும் உங்கள் மொபைல் சாதனமே செய்து விடும்.
ஓபன்-பே என்பது வாடிக்கையாளர்கள் வாகன பழுது சேவைக்காக உருவாக்கப்ட்டதாகும்.அதனால் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வாகன பாகங்களை வாங்க அனுமதிக்கும் ஒரு மின்னணு சார்ந்த வாணிகமாகும்.இந்த நிறுவனம் தொடங்கிய ஓபென்-பே பயன்பாட்டில் இதற்கு முன் வாகனத்தின் உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் இடையேயான ஒரு தகவல் தொடர்பினை தந்தது. இதனால் இருவருக்கும் இடையேயான வாகனம் சம்ந்தப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்கள் போன்றவற்றை அனுப்பிக் கொள்ள வசதிகள் செய்யப்பட்திருந்தது.அது வாகனத்தின் உரிமையாளருக்கும் வாகனத்தினை ஓட்டுபவர்களுக்கும் இடையே ஒரு பாலம் போலச் செயல்பட்டது. தற்போது இதில் கூடுதலாக ஓட்டுனருக்கும் மெக்கானிக்குகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளது .
அதாவது திடீரென ஒரு இயந்திரம் பழுதடையும் போது நமது பகுதிகளுக்கு அருகிலிருக்கும் மெக்கானிக்குகளிற்கு வாகனம் சம்மந்தபட்ட தகவலை பகிரும் வண்ணம் உருவாக்கபட்டுள்ளது .இதனால் வாகனம் சார்ந்த பிரச்சனைகளை உடனுக்குடன் மெக்கானிக்குகளுக்கு தெரியபடுத்தி அவர்களின் உதவியை நாடலாம். கூடவே பழுது பார்க்க வேண்டிய வாகனம் சமந்தப்பட்ட புகைப்படங்களையும் , வீடியோக்களையும் அவர்களுக்கு அனுப்பினால் அவர்களிடமிருந்து அதற்கு எவ்வளவு பணம் செலவாகும், வாகனத்தை எப்போது கடைக்கு எடுத்து வர வேண்டும் என்பது போன்ற தீர்வுகளையும் பெறலாம். மற்றும் ஓபன் -பே ASP-யை iOS 8.2 சாதனங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓபன்-பே கணக்ட் என்ற பயன்பாட்டினை அறிமுகபடுத்தியது . அதில் காரின் பழுதுகளை கண்டறியும் சென்சாரின் உதவிகளை கொண்டு காருக்கும் மொபைல் சாதனத்திற்கும் இடையே ஒரு தகவல் தொடர்பை உருவாக்கியது அனைவரும் அறிந்த்ததே! ஆகவே திடீரென பழுதடையும் உங்கள் வாகனங்களை சரி செய்ய முன் பின் தெரியாதவர்களை அனுகுவதை காட்டிலும் மொபைல் சாதனத்தை அணுகுவது சிறந்ததே !இந்த மாதிரியான நுட்பங்களால் தகவல் தொடர்பு வளர்ச்சி வாகன தொழிற்சாலைத் துறையிலும் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்ற !
Comments are closed.