619 total views
நடந்து கொண்டிருக்கும் மின்னணு வாணிக பந்தயத்தில் அமேசானே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தபடும் வலைத்தளம் என கம்ஸ்கோர் ஆராய்ச்சி கூறுகிறது. கம்ஸ்கோர் என்பது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கிடேயான தகவல்களை பகுப்பாய்வு செய்து அதனைப் பற்றிய பல மார்க்கெட்டிங் தரவுகளை வழங்கும் அமெரிக்க இணைய பகுப்பாய்வு நிறுவனமாகும். காம்ஸ்கோரின் தகவலின்படி அமேசான் 20கோடி பயனர்களையும் பிலிப்கார்ட் 16.4கோடி பயனர்களையும் மற்றும் ஸ்நாப் டீல் 10.9 கோடி பயனர்களையும் கொண்டுள்ளது.இந்த தரவுகளைக் கொண்டே அமேசான் தான் அதிகமாக பயனர்களால் பயன்படுத்தப்பட்ட வலைத்தளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதத்தினை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் இந்த வருடம் முழுவதுமான தரவுகளை பார்க்கும்போதும் அதிலும் அமேசானே அதிக பயனர்களைக் கொண்டுள்ளது தெரிய வருகிறது.
அக்டோபர் 2014 -இல் 14 கோடி பார்வையாளர்களை கடந்து முன்னணியில் இருந்தது தற்போது 16.3கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் கடந்த வருடம் 9 கோடி பயனர்களைப் பெற்ற ஸ்நாப்டீல் இந்த வருடம் 11கோடியைப் பெற்றுள்ளது.

Comments are closed.