771 total views, 2 views today
சமீபத்தில் பல பில்லியன் பயனர்களை கைவசம் கொண்டிருந்த வாட்ஸ் ஆப்பில் ஒரு புது அம்சம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை வாட்ஸ் அப்பில் போனுக்கும் போனுக்கும் மட்டுமே பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இனி லேண்ட்லைன் எண்ணிற்கும் பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 4ஜி நெட்ஒர்க் வசதி கொண்ட ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் மற்றும் பி.எஸ்.என்.எல் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்களில் இந்த வசதியை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதால் ‘டிராய்’ நிறுவனமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Comments are closed.