இனி இலவசமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…!
1,750 total views
உண்மையில் இது ஒரு நற்செய்தியே !அனைவரும் பயன்படுத்தும் குறுந்தகவல் பயன்பாடான வாட்ஸ் அப்பில் இதுவரை முதல் ஒரு வருடத்திற்கு மட்டும் இலவசமாகவும் அதன் பின்0.99$-யை வருடாந்திர கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினை வித்திருந்தது. தற்போது அந்த தடையை உடைக்கும் வண்ணம் அதன் வருடாந்திர கட்டணத்தை இன்றிலிருந்து நீக்கியுள்ளது.பில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கிய பேஸ்புக் தற்போது வணிக மாதிரிகளுக்கு ஏற்ற வேறு வழிவகைகளை செய்யத் தயாராகி வருகிறது. அதாவது இனி வாட்ஸ் அப்பை ஒரு B2C கம்யூனிகேசனுக்கு பயன்படுத்தவுள்ளனர். B2C நிறுவனங்கள் என்பது நேரடியாக ஒரு நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களிடையே நடத்தப் பெரும் பரிமாற்றங்களே!
Comments are closed.