பேஸ்புக் மேசேஞ்சரில் ரகசிய அரட்டைகளுக்கு……
670 total views
பல மில்லியன் பயனர்களை கொண்ட உலகளாவிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள பேஸ்புக் மெசேஞ்சரில் இரகசிய கலந்துரையாடல்கள் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒரு புது தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கூடவே இந்த ரகசிய கலந்துரையாடலில் தகவல்கள் encryption முறையில் பாதுகாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பேஸ்புக்கில் இணையதள வாணிகத்திற்கென புது செயலி ஒன்றையும் தொடங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதில் வாடிக்கையாளர்களிடம் ரோபோக்கள் நேரடியாக கலந்துரையாடல் செய்து பொருள்களை வாங்கும்படியோ அல்லது வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட தளத்திற்கு கொண்டு செல்லும்படியோ ஏற்பாடுகள் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Comments are closed.