745 total views
HP Laptops உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் Laptop ஒன்றாகும். அதற்கு காரணம் அவற்றினுடைய உயர் தரமும் அதே நேர்த்தில் அதன் அபாரமான செயல் திறனும் ஆகும். தற்போது HP Probook வரிசையில் புதிதாக HP Probook 6560b என்ற புதிய Laptop களமிறக்குகிறது HP நிறுவனம்.
இந்த Probook 6560b Laptop-ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது Intel® Core™ i5-2520M dual-core processor கொண்டிருக்கிறது. இதன் chipset Intel HM65 ஆகும். மேலும் இதில் இன்டல் HD Graphics 3000 யூனிட்டும் உண்டு.
இதன் display பார்த்தால் இது 15.6 inch அளவு கொண்டு LED backlit anti-glare வசதியைக் கொண்டுள்ளது. இந்த display resolution 1366 x 768 pixels ஆகும். அதுபோல் இது 320 GB SATA HDD சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.
இணைப்பு வசதிக்காக இந்த Laptop WiFi, Bluetooth, HDMI, Gigabit Ethernet, RJ 45 LAN மற்றும் 3 USB போர்ட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் battery 6 செல் கொண்ட Lithium Ion battery ஆகும்.
இந்த ப்ரோபுக் லேப்டாப் 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு Web Camera கொண்டுள்ளது. அதனால் வீடியோ குழு உரையாடலை மிக அருமையாகச் செய்ய முடியும். இந்த Probook 650b Laptop-ன் விலை ரூ.53,071 ஆகும்.
Comments are closed.