1,800 total views
உங்களுக்கு நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை ஆப்பிள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு அந்த நிறுவனம் இன்னும் 20 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வண்டி ஓட்டலாம். ஆனாலும் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருமானம் ஈட்டுவதை செய்து வருகிறது. ஆனால் தற்போது நடப்பவைகளைப் பார்த்தல் இந்த நிறுவனம் தள்ளாட்டம் காணும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.

- ஐ–வாட்ச் எனும் புதிய கை கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள். ஐ போனில் உள்ள அனேக வசதிகளையும் கொண்ட இந்த வாட்ச் சுமார் 40 வித மாடல்களில் வெளிவந்துள்ளது. நீங்கள் விரும்பினால் தங்க வாட்ச் செய்தும் தர இருக்கிறது ஆப்பிள்.
பிரச்னை என்னவென்றால் இதன் சிறப்பம்சங்கள் ஐ போன் இருந்தால் மட்டுமே வேலை செய்யும். இதன் விலையோ மிக அதிகமாக உள்ளது (வழக்கம் போல).
Pebble எனும் நிறுவனம் அருமையான ஸ்மார்ட் கை கடிகாரங்களை அறிமுகம் செய்து அமெரிக்காவில் வெற்றியடைந்தது. அதைப் பார்த்து தற்போது அதிக விலையில் குறைந்த வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள்.
- USB-C எனும் புதியரக USB Portஐ தான் புதிதாக அறிமுகம் செய்துள்ள mac air மடிக்கணினியில் பொருத்தியுள்ளது அப்பிள். அதுவும் ஒரே ஒரு போர்ட் மட்டுமே இந்த மடிக்கணினியில் இருக்கும். பொதுவாக பேட்டரியை சார்ஜ் செய்ய தனியாக ஒரு power port இருக்கும். ஆனால் இந்த USB-C வகை port மற்ற போர்ட்களைப் போல் செவ்வகமாக இல்லாமல் நீள் வட்டம் போல இருக்கும்., இதனால் ஏற்கனவே உள்ள எந்தவொரு USB சாதனத்தையும் நாம் பயன்படுத்த முடியாது. மடிக்கணினி சார்ஜ் செய்யும் போது இருக்கும் ஒரே ஒரு USB-C போர்ட் பயன்பாட்டில் இருக்கும் உங்களால் உங்கள் ஐ போனைக் கூட இந்த மடிக்கணினியில் சொருக இயலாது.
ஆப்பிளில் வேலை செய்யும் R&D ஊழியர்களுக்கு என்னாச்சு என தீவிர ஆப்பிள் விசிறிகளே இணையத்தில் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.
It is truly a great and helpful piece of information. I am satisfied that you simply shared this useful information with us. Please stay us informed like this. Thanks for sharing.!! recording app