புத்துயிர் பெறுகிறது HP Touchpad

1,018

 1,995 total views

நீண்ட நாள்களுக்கு முன்பே HP நிறுவனம் தனது touchpad-ஐ மற்ற நிறுவனங்களின் touchpad-களை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது. முதலில் touchpad-களின் விலை ரூ.25000க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் மக்கள் மத்தியில் இது பெரிய வரவேற்பைப் பெறாததால் ஒரு சில நிறுவனங்கள் விலையைக் குறைத்தன.

முதலில் மக்கள் மத்தியில் HP touchpad ஏன் எடுபடவில்லை என்றால் அதன் applications மற்றும் utilities மிகவும் குறைவானவை. சினோஜென் [Cyanogen] போன்ற ஒரு சில தனியார் நிறுவனங்கள் HP touchpad-ல் உள்ள முக்கிய அம்சங்களை வெளிக் கொணர முனைந்தனர். அதனால் சினோஜென் மிகவும் எச்சரிக்கையாக கையாண்டு இந்த HP touchpad-ஐ Android-க்கு மாற்றியது. அதனால் இந்த touchpad புத்துயிர் பெற்று பழையது போல அல்லாமல் புதியதாக செயல்படும். அதுபோல் இதில் utilities அதிகரிக்கப்பட்டன. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக சேர்க்கப்பட்டன. அதுபோல் இதன் திரையில் customized icons Home, Menu மற்றும் பேக் போன்ற குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எனவே சினோஜென் உதவியுடன் வந்த இந்த touchpad  சினோஜென்மோட் 7 என்ற பெயரில் புத்துயிர் பெற்று வாடிக்கையாளர்களைக் கவர ஆரம்பித்தது. இப்போது HP touchpad-ல் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை சினோஜென் பரிசோதித்தது. அதன் பயனாக எச்பி டச்பேட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தைப் பெற்றது. அதனால் இப்போது இந்த டச்பேட் சூப்பராக உள்ளது. ஆனாலும் இதில் உள்ள கேமரா மற்றும் வீடியோ playback போன்றவை இன்னும் கவனிக்கப்பட வேண்டும். விரைவில் Cyanogen Mod 9 வரும் என்று எதிர்பார்க்கலாம்.

You might also like

Comments are closed.