ஜப்பான் கதிர்வீச்சு தடுப்பு பனிச்சுவரால் பலனில்லை
1,047 total views
FUKUSHIMA அணுவுலை நிலையத்தின் அணுக்கதிர்வீச்சு மாசுப்பட்ட நீர் குடிநீருடன் கலக்காமல் இருக்க JAPAN எடுத்த பணிச்சுவர் அமைக்கும் பணி எதிர்பார்க்கபட்ட நேரத்தில் நிறைவடையவில்லை, ஆனால் நீரை உறையவைக்கும் அளவுக்கு வெப்பநிலை ஏற்றதாக இல்லை என்கிறார், இச்சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்ட TEPCO நிறுவனத்தின் பொறியாளர்.
20 முதல் 40 மீட்டர் பூமிக்கு அடியில் குழிகளை தோண்டி ஒவ்வொரு மீட்டர் இடைவேளையில் செங்குத்து குழாய்கள் பதித்து அவற்றில் பனி உறைய வைக்கும் திரவத்தை ஊற்றி மாசுபட்ட நீரை தடுக்கும் முயற்சிகள் செய்து வருகிறது.
முன்பு வேறு இடங்களில் சிறிய அளவு சுவர்கள் CALCIUM CHLORIDE திரவத்தை பயன்படுத்தி உருவாக்கினர், அம்முயற்சி இங்கு பயனளிக்கவில்லலை…..
இந்த கலப்படம் தொடரும் பிரச்சனையாக அமைந்துள்ளது… இதற்கு வேறு சிறந்த வழிகளை பொறியாளர்கள் கண்டுபிடிப்பது நல்லது. கிட்டத்தட்ட 100 மெட்ரிக் டன் தண்ணீர் கிடங்குகளில் தேக்கி வைக்கபட்டுள்ளது, இது கடலில் கலப்பதால் கடல் உயிரினங்கள் கதிர் அலைகளால் பாதிக்கபடுகிறது. அவற்றை உண்ணும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.
கடந்த சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு தான் இந்த கசிவுக்கு காரணம் என்கிறது FUKUSHIMA அணுவுலை நிர்வாகம்.
Comments are closed.