சிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்

384

 731 total views

 தொழில் நுட்பம்  மக்கு பல  புதுமையான  அனுபவங்களை தந்து கொண்டு  இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட  டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள்  உள்ளன. அதில்  Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை  புகுத்தி  உள்ளது .அதன்  முதன்மை  செயலராக  லேன் ராபட்ஸ் உள்ளார் .
      Ticketlabs  நிறுவனம்  தனது  முதல்  விற்பனையை  ஜனவரி  16  ஆம்  தேதி   டொராண்டோ  பகுதியில்  தொடங்கியது. இது சிறிய கலைஞர்களின்  நிகழ்ச்சிக்கான டிக்கட் விற்பனை எனும் சவாலை  தனது  கட்டமைப்பைக் கொண்டு மேம்படுத்தும்  உத்தியை  தெரிந்து வைத்து  இருக்கிறது    Ticketlabs  தளம்.
முதல்  வேலையாக பெரும்பாலும்  இந்த  துறையில் பிரச்சனையாக இருந்தவைகளை இவர்கள் அடையாலம் கண்டனர் .  மக்கள்  படிவங்களை நிரப்புவதை  விரும்பவில்லை.  அதே  போல் சிறிய  நிகழ்ச்சிகள் மற்றும் இடங்களில்  டிக்கெட் விற்பதும்    கடினமானதாக  இருந்தது.  இவற்றை  சரி  செய்யும்  வழிகளையும் அவர்கள்  கண்டனர் 

சமுக வலை  தளங்களையும்  அவற்றின் தகவல்களையும் நன்றாக  பயன்படுத்தி  கொண்டனர் வாங்குபவரின்  பெயர், முகவரி, . மின்னஞ்சல், கைபேசி எண்  ஆகியவற்றை முகநுலில்  இருந்தே தானாக Ticketlabs  எடுத்துக்கொள்ளும் .

mobile-devices


ஒரு  நிகழ்ச்சிக்கான  அழைப்பை  முகநுலில் துவங்கி அதில்    மக்களை  ஈர்க்கும்  நிறத்திலான படங்களை இணைத்து  அதில் டிக்கட்  விற்பனைக்கான  இணைப்பையும் கொடுத்தனர் இது  மிக  நன்றாகவே  பலன் கொடுத்தது. ஒருவர்  தான்  இந்த  நிகழ்ச்சிக்குப்
போவதாக  முகநுலில்  பதியும் போது அவரின்  நண்பர்கள்  அந்த நிலைதகவல்  வழியாகவே தானும் டிக்கட்  வாங்கி  கொள்ளலாம். ஒரு  கல்லில் இரண்டு  மாங்காய் என்பது  இது தான்.
   இந்த  முறைகளைப் பயன்படுத்தி  50க்கும்  மேற்பட்ட நிகழ்ச்சிகள்  மூலமாக  $500,000 க்கு  அதிகமான  டிக்கட் விற்பனையை  செய்துள்ளார்கள்.  இதில்  750க்கும்

​ மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டு   உள்ளனர். பெரும்பாலும்   ஆடம்பரமான பொழுது  போக்கு  மனநிலை  உள்ள இளைஞர்களையே  வாடிக்கையாளர்களாகக் கொண்டு  உள்ளனர் ,   இவர்களை கவரும்  வண்ணமே திட்டங்கள்   தீட்டப்படுகிறது .    என்ன திட்டம் போட்டாலும்  இந்த Ticketlabs  நம்ம ஊருக்கு பயன்படாது  ஏன்னா  நாம 300 கோடி  ரூபா  படத்தையே  30 ரூபா சீடில பாக்குற  ஆட்கள்

You might also like

Comments are closed.