ஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்

68

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், சலுகைகள், சேவைகள், தள்ளுபடி என வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில், தற்போது ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லாத சிறிய விமானம் மூலம் பொருட்களை விநியோகம் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் சிறிய விமானம், 400 அடி உயரத்தில் 30 நிமிடங்களுக்கு பறக்கும் திறன் கொண்டது. இதற்கான சோதனை முயற்சி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமேசன் நிறுவனம் இந்தச் சேவைக்கு ’அமேசான் பிரைம் ஏர்’ என்று பெயர் சூட்டியுள்ளது.

புதிய ட்ரோன் வெப் காமிராக்கள் மற்றும் சோனார் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இயந்திர கற்றல் மாதிரிகள் உதவியுடன், உள்வழி கணினிகள் தானாகவே தடைகளை அடையாளம் கண்டு அவற்றை சுற்றி செல்லும்.

இந்த ட்ரோன் விமானம் மூலமாக 2.7 கிலோ கிராம் வரையிலான எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 15 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் இந்த விமானம் பார்சலை     மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like