1,264 total views
இன்று (September – 09- 2015) ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஐ வாட்ச் மூலம் நோயாளிகளின் இதய மற்றும் ரத்த அழுத்த அளவுகளை நோயாளிகள் கையில் உள்ள ஐ வாட்சில் இருந்து உடனடியாக மருத்துவர் கையில் உள்ள ஐ வாட்சில் தெரியும். இதனால் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி மருத்துவமனை வரத் தேவையில்லை. மருத்துவரும் இருந்த இடத்தில இருந்தே அவசர பிரச்சனைகளை உடனே தெரிந்து உடனடி மருத்துவ குறிப்புகள் கொடுக்கலாம்.ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல நீங்கள் உங்கள் வீட்டில் வைத்துள்ள ரகசிய கேமராவின் காணொளிப் படம் உங்கள் ஐ வாட்சில் தெரியும் வசதியும் உள்ளது.
iPad Pro என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டேப்லட் கணினி முழுக்க முழுக்க அதிக திறன் கொண்ட திரை (12.9 இன்ச்) புதிய A9 செயலி, நான்கு ஒலிப்பான்கள் (speakers), 10 மணிநேர மின்கல திறன், 8 மெகா பிக்சல் கேமரா, திரையின் மீது எழுத பென்சில் எனும் உள்ளீட்டுக் கருவி, தனியாக இணைக்கக் கூடிய கீ போர்ட். இதை பார்க்கும் போது மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்டு வெற்றி பெற்ற சர்பேஸ் ப்ரோ 3 வகை டேப்லட்டின் பல அம்சங்களை அப்படியே ஈஅடிசான் நகலெடுத்து ஆப்பிள் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது போல் தெரிகிறது. ஆனால் இதன் திரை தெளிவு திறன் மட்டுமே புதிய சிறப்பம்சமாகும்.
tvOS எனப்படும் புதிய வகை இயக்கு தளத்தில் இயங்கும் சிறிய சோப்பு டப்பா அளவிலான ஒரு சாதனம் தான் iTV பல வருடங்களாக உள்ள பிற சாம்சங், எல்.ஜி ஸ்மார்ட் டிவி க் களை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த டிவி அறிமுகம் ஆகியுள்ளது. “சிறி” எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியாள் மென்பொருளை இந்த டிவி கொண்டுள்ளது. அர்னால்ட் நடித்த காதல் படங்கள் வேண்டும் “show me romantic movies by arnold” என நீங்கள் உங்கள் கையில் உள்ள ரிமொட்டிடம் சொன்னால் அந்த திரைப்படங்களை ஏற்கனவே உள்ள நெட்ப்ளிக்ஸ் (Netflix , Hulu, Hbo ) மென்பொருள்கள் வழியாக கண்டறிந்து காட்டும். இதில் YouTube இல்லை. நீங்கள் ஐ போன் , ஐ பேடில் வாங்கும் படங்கள், விளையாட்டுக்கள் இனி இந்த டிவியிலும் தெரியும். குறி பார்த்து அமுக்க வேண்டிய தேவையை புதிய ரிமோட் அகற்றியுள்ளது. ஆம் புளூடூத் வகை (தற்போது உள்ளவை அக சிகப்பு கதிர் Infra Red ) அலைவரிசையில் நீங்கள் அடுப்படியில் இருந்து கொண்டே ஒலியை குறைப்பதை எளிதாகச் செய்ய முடியும். என் மனைவிக்கு இது உதவும் என நினைக்கிறன். அதுமட்டுமல்ல மடிக் கணினிகளில் உள்ளது போல தொடு உள்ளீடு (Track Pad) உள்ளது இந்த ரிமோட்டில்.
ஐபோன் 6s & ஐபோன் 6s Plus உடனடியாக Australia, Canada, China, France, Germany, Japan, Hong Kong, Puerto Rico, UK & USA ஆகிய நாடுகளில் வரும் செப்டம்பர் 25 முதல் கிடைக்கும். 12M , 5M கேமராக்கள், இருபுறமும் கேமரா Flash Light. 4K ரக உயர் தெளிவு திறன் படங்களையும் காட்சிப் படுத்தும் திறன் என கேமரா அற்புதமாக உள்ளது. இந்த கைபேசியில் உள்ள புதிய செயலி முந்தைய ஐ போன் 6இன் செயலியை விட 90% திறன் வாய்ந்தது என அறிவித்துள்ளார்கள். வேறு எந்த கைபேசியிலும் இல்லாத வகையில் “3டி டச்” எனும் புதிய வகையில் திரையை சற்று அதிகமாக அழுத்துவதை ஒரு புதிய வகை உள்ளீட்டு முறையாக அறிமுகம் செய்துள்ளனர். இது சாதாரணமாக செய்ய முடியும் ஒரு வன்பொருள் வடிவமைப்பு அல்ல. தொடு திரையின் மேலும் – உள்ளீடு சென்சாரும் – இயக்கு தளமும் இணைந்து தொடுதலின் வித்யாசத்தை உணரும் ஒரு முறை இது. எனக்கு இது ஒரு பெரிய அளவில் பயன்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்துமா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த புதிய ஐபோன் நல்ல வசதிகளுடன் புதிய iOS 9 பதிப்புடன் வெளி வருகிறது. மற்ற படி முந்தைய ஐ போன் 6 போன்ற வடிவமைப்புடன் தான் இந்த புதிய போன் உள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்களை இழுக்கும் ஆப்பிள்:
ஆண்ட்ராய்டு கைபேசி பயன்படுத்துபவர் எளிதாக தனது பழைய ஆண்ட்ராய்டு கைபேசியில் உள்ள தனது கணக்கு விவரங்கள், மென்பொருள்கள், படங்கள் ஆகியவற்றை இந்த புதிய ஐ போனில் எளிதாக இடமாற்றம் செய்யும் வசதி வந்துள்ளது.
வருடா வருடம் புதிய ஐபோன் கிடைக்க மாத சந்தா:
ஆப்பிள் நிறுவனம் வருடா வருடம் புதிய ஐபோனை அறிமுகம் செய்து வருகிறது. தங்களின் வாடிக்கையாளர்கள் , ரசிகர்கள் புதிய ஐபோன் கைபேசி வாங்குவதில் உள்ள தயக்கம், புதிய விலை கொடுத்தல் போன்ற பிரச்சனைகள் இனி இருக்கவே கூடாது எனும் எண்ணத்தில், அமெரிக்கர் ஒருவர் மாதா மாதம் 32$ கட்டி வந்தால் ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன் அறிமுகம் ஆகும் போதும் உங்களுக்கு புதிய ஐபோன் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது கிட்டத்தட்ட நீங்கள் மாத வாடகை கட்டுவது போல ஆனால் புதிய வீடு வருடா வருடம் குடி போவீர்கள். நானும் வருசத்துக்கு ஒரு வீடு மாறிகிட்டு இருக்கேன்.
Comments are closed.