1,399 total views
வீட்டில் உள்ள டெட்டால் ஹேண்டு வாஷ் , ஏரியல் , துணி துவைக்கும் சோப்பு, குளிக்கும் சோப்பு, சவர், பாத்திரம் தேய்க்கும் சோப்பு, பேஸ்ட், சாம்பு இவை எல்லாம் நம் தண்ணீர் பயன்பாட்டை பலமடங்கு செலவு செய்ய வைக்கிறது.மேற்ச் சொன்ன பொருட்களில் அனேக பொருட்களை மூன்று நிறுவனங்கள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்து வருகின்றன. இவற்றுள் குளிக்க பயன்படும் சவர் வழியே வரும் தண்ணீரை சுமார் 70% வரை குறைத்து வழங்கும் புதிய வகை சவர் மூடி ஒன்றை நீபியா எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த சவர் மூடி நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி Tim Cook & கூகள் முன்னாள் தலைமை அதிகாரி Eric Schmidt போன்றோர் முதலீடு செய்துள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த வகை சவரை பயன்படுத்தி குளித்தால் ஒட்டு மொத்த ஐக்கிய அமெரிக்க நாட்டின் தண்ணீர் பயன்பாட்டில் 1.5% குறையும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. சுமார் 18000 ரூபாய் (300 டாலர்) விலையில் வந்துள்ள இந்த புதிய சவர் , ஏற்கனவே கடந்த 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மற்ற வகை சவர் நிறுவனங்களை விட நன்றாக உள்ளதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.
Comments are closed.