சாக்லேட் உலகில் புரட்சி செய்ய வந்துள்ளது 3-D Printed சாக்லேட்கள் :
588 total views
முந்தைய காலத்தில் கற்கண்டையும் , கமற்கண்டையும் சுவைத்துக் கொண்டிருந்தோம். காலம் செல்லச் செல்ல தலைமுறை மாற்றத்திற்கேற்ப சுவிங்க மிட்டாய்கள் , ஜெல்லிகள், பாலால் செய்த இனிப்பு தின்பண்டங்களையும் உண்டோம். தற்போது இருக்கும் அறிவியல் தொழில் நுட்ப உலகில் ஒரு படி முன்னேறி 3_D சாக்லேட்கலை சுவைக்க தயாராகுங்கள் …..! இது நம் கண்களுக்கும் வாய்க்கும் மிகப்பெரிய விருந்தாக அமையும். வட அமெரிக்காவின் இனிப்பு தின்பண்டம் தாயாரிக்கும் நிறுவனமான ஹெர்ஷே தான் இந்த முப்பரிமான வடிவத்துடன் எளிதில் அனைவரயும் கவரக்கூடிய கூடிய சாக்லேட்கலை தயாரித்து வருகிறது.இந்த நிறுவனம் கடந்த வருடம் 3-D நிறுவனத்துடன் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-D யின் coco jet Printer களின் உதவியுடன் சாக்லேட் பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் கவர்ச்சிகரமான இனிப்புகளை எதிர்பாராத வடிவம் மற்றும் உருவங்களில் வழங்க தயாராகி வருகிறது.
https://youtu.be/slksoDJPJ94https://youtu.be/9FajGAeJ840
3-D Printed சாக்லேட்கள் :
இதில் நமக்கு பிடித்தமானவரின் உருவத்தையோ அல்லது டிசைன்களையோ கணினியில் CADD வடிவமைப்பாளர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு பின் அதற்கேற்ற மென்பொருள் ப்ரோக்ராம் செய்யப்பட்டு coco jet Printer களில் செலுத்தி முப்பரிமான வடிவத்தில் சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இது சாக்லேட் பிரவுன் மற்றும் வெள்ளை நிறங்களில் மிகவும் சிக்கலான வடிவங்களான அறுங்கோணம்,ஐங்கோண வடிவங்களில் வடிவமைக்கப்படுகின்றன. இதற்க்கு ஒரு வருடத்திற்கு முன்னரே உலகில் முதல் முறையாக 3-D இனிப்புகளை CHOCOLAM நிறுவனம் தயாரித்திருப்பினும் இன்னும் அவர்கள் உணவு தர சான்றிதழை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தற்போது “Choco edge” நிறுவனமும் 3-D உணவுகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.இது போன்ற பல நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும் ஹெர்ஷே நிறுவனம் நம்பியிருப்பது 3-D அமைப்பு நிறுவனத்தின் coco jet Printer களை மட்டும்தான் …!
சக் ஹல்: ஹெர்ஷே நிறுவனத்துடன் உள்ள எங்களது கூட்டணியில் அற்புதமான சமையல் அனுபவங்களுடன் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க அனுமதியளிக்கின்றது என்று 3-D அமைப்பின் CEO திரு.சக் ஹல் கூறியுள்ளார்.
ஹெர்ஷே நிறுவனம் தயாரித்துள்ள 3-D Printed சாக்லேட்களை புதுவிதமான விதத்தில் முப்பரிமான வடிவத்தில் சுவைத்து மகிழலாம்.
- திருவிழாக்காலங்களிலும் , பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களிலும் இத்தகைய புது விதமான இனிப்புகளை பரிசளித்து அசத்தலாம்.
- காதலர் தினத்தில் இதன் பங்களிப்பு வரவேற்க்கத்தக்கதாக இருக்கும்.
- சிறுவர்களுக்கு அவர்கள் தேவைப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவத்தில் இனிப்புகளை பரிசளித்து அசத்தலாம்.
- பேக்கரிகளில் கேக்குகளின் மேல் அலங்காரம் செய்யவும் பயன்படுகிறது.
ஹெர்ஷே நிறுவனம் co co jet printer களை போன்ற chefjet printer களையும் இந்த வருட இறுதியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் சமையல் மென்பொருள் குறிப்புகளுடன் இனிப்புகளை பல்வேறு சுவைகளில் வழங்கும் .
சமீப காலமாக பல நிறுவனங்கள் உணவு பிரிண்டர்கள், பேன் கேக் பிரிண்டர்கள், ஐஸ் கிரீம் ப்ரிண்டர்களையும் தயாரித்து வருகின்றனர் . இந்த உணவு பிரிண்டர்கள் உணவு வீணாகும் வீதத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட உள்ளன.
ஆரோக்கியமானதா?
இத்தகைய ப்ரிண்டர்களால் செய்த உணவுகள் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இது சத்து மிக்க ஊட்டப்பொருட்களான ஆல்கா , கீரைகள், பூச்சிகள் போன்றவற்றை உணவில் சேர்த்தது உணவு வீணாகாமல் தனி ஒருவரின் விருப்பம் மற்றும் உணவின் அளவை அறிந்து வடிவமைக்கபடுகிறது.
அடுத்தது என்ன?
அடுத்த தலைமுறையில் 4-D உணவுகள் பல்வேறு பரிமானங்களில் வெவ்வேறு நிறம் மற்றும் சுவையைக் கொண்டு வடிவமைக்கப்படலாம். இத்தகைய Food Printer கள் இந்தியாவிற்கு வந்தால் வருடத்திற்கு உணவு உற்பத்தில் வீணடிக்கப்படும் 1.3 பில்லியன் டன்களின் வீதம் குறைக்கப்படலாம். முழுமையாக சந்தைக்கு வந்த பின் உணவகங்கள், பேக்கரிகள்,இனிப்பு தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் காதலர் தினத்தன்று அனைவரின் கைகளிலும் 3-D சாக்லேட்களால் உருவாக்கப்பட்ட ரோஜாவையோ அல்லது தாஜ்மஹாலையோ காணலாம்.
Comments are closed.