​Microsoft கொடுக்கும் 3 முக்கிய செய்திகள்

494

 1,962 total views

1. Skype இனி Google Hangout போல் செயல்படும்.

எவருக்காவது வீடியோ சாட் அல்லது சாட் செய்ய இனி கணினிகளில் skype மென்பொருள் பதியத் தேவையில்லை www.Skype.com இணைய தளம் மூலம் உங்கள் இணைய உலவி கொண்டே சாட் செய்யல்லாம். விரைவில் அனைத்து நாட்டு பயனாளர்களுக்கும் இந்த வசதி ஓரிரு நாட்களில் வருகிறது.

2. Visual Studio Community Editor 2013 is FREE!

VB.NET , C #, ASP.NET  நிரலாக்குநர்களுக்கு (Programmers) Visual Studio Express எனும் நிரல் எழுது முகப்பு மென்பொருள் மிகவும் முக்கியமானதாகும். இது சில ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் இருந்தது. தற்போது பலரும் .NET நிரல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்  முழுத்  திறன் கொண்ட Visual Studio Community Edition 2013 இலவசமாக அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். தனி நபர் மற்றும் மென்பொருள் நிறுவனங்களும் இலவசமாக பயன்படுத்தலாம்.
vscommunity

3. Windows 10 for Lumia Phones

தற்போது எந்தெந்த Lumia வகை கைபேசிகளால் Windows 8.1 இயக்குதளத்தில் செயல்பட முடிகிறதோ அந்த லுமியா வகை கைபேசிகளால் புதிய Windows 10 தளம் வரும் போது அதை நிறுவிக்கொள்ள முடியும் என அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே சத்யா நாதெல்ல இதே போன்று Surface மடிக்கணினிக்கும் புதிய இயக்குதளம் மற்றும் புதிய உப பொருள்கள் (Accessories) வரும் போது சிக்கல்கள் இல்லாது பயன்படுதிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார். நான் பயன்படுத்தும் Lumia 730 மற்றும் Surface Pro 3 எந்த சிக்கலும் இல்லாமல் அதிக நாள் எனக்கு பயன்படும் என்ற நம்பிக்கை இப்பொழுது வந்துள்ளது.
10655259_10152421463302584_7848191916554827344_o

You might also like

Comments are closed.