ஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்
2,945 total views
சில நாட்களுக்கு முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற சலுகை விற்பணையை அறிவித்தது அது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற போதும் தோல்வி அடைந்தது. ஆனால் அரசு இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் என்று அமைச்சர் அறிக்கைவிட்டார். மின் வணிகம் என்பது தொலைக்காட்சிகளில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இருந்த போதும் அந்த நிறுவனத்திற்க்கு எந்த லாபமும் இல்லாமல் அது முடிந்தது. ஆனால் சீனாவில் அலிபாபா இணையதளம் மிக சிறப்பாக சலுகை விற்பனையை செய்துள்ளது.
சீனாவில் முன்னணி மின் வணிக நிறுவனமான அலிபாபா செவ்வாய்க்கிழமை நடத்திய ஒரு நாள் சலுகை விற்பனையில் 9,300 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் விற்பனைசெய்துள்ளது இந்நிறுவனம். ஆண்டுதோறும் நவம்பர் 11-ம் தேதியன்று மகத்தான தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த சலுகை விற்பனையில் மின் வணிக சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அதிக அளவுக்கு பொருட்களை விற்பனை செய்து சாதாரண வணிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதே சலுகை விற்பனை கடந்த ஆண்டு நடந்த போது 580 கோடி டாலருக்கு விற்பனை நடந்திருந்தது.
இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு அளவில் தான் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விற்பனை அளவு அதைவிட பலமடங்கு அதிகமாகியுள்ளது. மொத்தம் 27.80 கோடி பேர் இந்த விற்பனையில் பொருளட்களை வாங்க பதிவு செய்துள்ளனர். இவர்களில் 43 சதவீதம் பேர் அலைபேசிகளையும் அது சார்ந்த பொருள்கள்வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்களாவர். கடந்த ஆண்டு இந்நிறுவனம் நடத்திய விற்பனையில் 15 கோடி பேர் பங்கேற்று பொருள்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் வர்த்தகத்தில் 27,000 வர்த்தக நிறுவனங்கள் 220 நாடுகளில்தங்களுடைய தயாரிப்புகளை அலிபாபா மின் வணிகம் மூலம் விற்பனை செய்யதுள்ளன. சமீபத்தில்தான் இந்நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு அமெரிக்கர்கள் பங்கு முதலிடு செய்ய வலி வகுத்தது.
Snapdeal விற்பனை
இந்தியாவில் செயல்படும் மின் வணிக நிறுவனமான SnapDeal, செவ்வாய்க்கிழமை இதேபோன்று சலுகை விற்பனையை அறிவித்தது. செவ்வாய்க்கிழமை காலை 7மணிக்கு இந்நிறுவன விற்பனை தொடங்கியது. செல்போன், ஆயத்தஆடைகள், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த நிறுவனத்தின்இணையதளம் விரைவிலேயே முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாயினர். மின் வணிக நிறுவனங்கள் எப்படி இத்தகைய சலுகைகளை வழங்குகின்றன என ஏற்கணவே நமது தளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த வணிக நிறுவனங்களின் பொருட்களின் தரம் பற்றி மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Comments are closed.