மைக்ரோசாப்ட் : தன்னியக்க ரோபோக்களுக்கான புதிய பணிதளம் வெளியீடு

494

 867 total views

அமெரிக்காவின் சியாட்டிலில் திங்கள் அன்று நடைபெற்ற டெவலப்பர் மாநாட்டில், மைக்ரோசாப்ட் தனது செயலிகள், வெப் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான, புதிய ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் சேவைகளை அறிவித்தது.மைக்ரோசாப்ட் தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இன்றைய தொழில் நுட்ப உலகம், அடுத்தக் கட்டத்திற்கு வெகுவாக முன்னேறி வருகிறது. மனிதர்களின் மூளையை மிஞ்சும் வகையில் வெளிவரும் ஒவ்வொரு கண்டுப்பிடிப்புகளும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. அந்த வகையில், ரோபோ தயாரிப்பில் முன்னோடியாக திகழும்  பான்சாய் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கைப்பற்றிய நிலையில் மைக்ரோசாப்ட் தன்னியக்க  ரோபோக்களுக்கான  புதிய பணிதளம் வெளியீடுள்ளது.

இது தன்னியக்க இயற்பியல் அமைப்புகளை உருவாக்குவதற்கான மாதிரிகள் பயிற்சிக்கு டெவலப்பர்களுக்கு உதவும். இந்த தளம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயந்திர கற்றல் கருவிகளையும் AirSim மற்றும் திறந்த மூல ரோபோ இயக்க முறைமை போன்ற நிறுவனத்தின் உருவகப்படுத்துதலுடன் இணைக்கிறது.

மேலும் இந்த  புதிய தொழில்நுட்பம் பல நிறுவனத்தின் IOT சேவைகள் மற்றும் அதன் திறந்த மூல ஆகியவை இந்த புதிய தளத்தை ஒருங்கிணைக்கிறது.

You might also like

Comments are closed.