உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரெட் ஹட் பொறியாளர் சான்றிதழ்

651

 650 total views

அமெரிக்க  மென்பொருள் நிறுவனமான ரெட் ஹட் (red hat) சமீபகாலமாக, RHCSA (Red Hat சான்றளிக்கப்பட்ட கணினி நிர்வாகி), RHCE (Red Hat சான்றளிக்கப்பட்ட பொறியாளர்),  RHCA (Red Hat சான்றளிக்கப்பட்ட சிற்பி), Red Hat சான்றளிக்கப்பட்ட மெய்நிகராக்க நிர்வாகி (RHCVA) மற்றும் இன்னும் பல பல சான்றிதழ்களை வழங்கிவருகிறது.அந்நிறுவனம்  சமீபத்தில் IBM நிறுவனத்தால் வாங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

கம்பெனிகள் எப்போதும் ஒரு தனிதிறன் கொண்ட திறமையான நபரையே  தேர்ந்தெடுக்க விரும்பம். ஒரு தொழில் துறை நிபுணரான ஒருவர் எப்போதும்  தன்னுடைய திறன்களை மேம்படுத்த வேண்டும், புதிதாக உருவாகும் சூழலில் நிலைநாட்ட வேண்டும். உங்கள் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க  red hat certificate மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது.

RHCSA என்பது  linux system administator க்கு ஒரு நுழைவு-நிலை தேர்வாகும்.RHCE மற்றும் RHCA போன்ற உயர் தர சான்றிதழ்களை பெறுவதன் மூலம் உங்கள் திறமையை மேலும் அதிகப்படுத்தலாம்.

ரெட் ஹட் பொறியாளர் சான்றிதழைப் (red hat certified engineer)எப்படி பெறுவது?

  • கணினி நிர்வாகத்தில் திறமைகளை மேம்படுத்துவது அவசியம்.
  • அத்தியாவசிய கருவிகளின் செயல்பாட்டை  புரிந்துகொள்ள வேண்டும்.
  • பயனர்கள் மற்றும் குழுக்களை நிர்வகிக்க வேண்டும்.
  • பாதுகாப்பை நிர்வகிக்கவேண்டும்.

நீங்கள் RHCE ஆக விரும்பினால், முதலில் RHCSA சான்றிதழ் (EX200 பரீட்சை) அடுத்தபடியாக RHCE பரீட்சை (EX300)  ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

ரெட் ஹட் சான்றிதழ் முற்றிலும் செயல்திறன் சார்ந்த தேர்வுகள். இது உங்களுக்கான  வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். உங்கள் வெற்றி கதவுகளைத் திறக்கும் வகையில்  RHCE இல் கணினி நிர்வாகங்களுக்கான சராசரி சம்பளம்  ரூ .5 லட்சம் மற்றும்  Development Operations Engineers ரூ 7 லட்சம் வரை  சம்பாதிக்கலாம்.மேலும் Red Hat இன் சான்றிதழ் உங்கள் திறமை மற்றும் அறிவை அங்கீகரிக்கிறது மற்றும் நீங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறீர்கள்.

You might also like

Comments are closed.