இன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள் !!!
1,088 total views
உலகின் தலை சிறந்த தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது இன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
கூகுள் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் புதிய லோகோ வை தனது முகப்பு பகுதியில் வைத்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 89 வயதான வெய்ன் தீபாவுட் என்ற ஓவியர் இதை தயாரித்துள்ளார்.கூகுள் செப்டம்பர் 7 ஆம் தேததியை தனது பிறந்த நாளாக கொண்டாடி வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 27 தேததியை கொண்டாடி வருகிறது.
கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Googol” என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் எழுத்துப் பிழை ஏற்பட நமக்கு “Google” என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் “Google”” எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான எழுத்துப் பிழையுடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி கூகுள் உலகின் முதல் தர தேடல் பொறியாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. கூகுள் நிறுவனம் தொட்ட தெல்லாம் தங்கமாக மாறவில்லை. அதற்கு பின்னால் மிகவும் மோசமான தோல்விகளும் உண்டு.
இதோ அவற்றில் சில :
ORKUT -ம் தோல்வியை அடைந்தது என மக்களிடையே கருத்து நிலவுகிறது .ஆனால் இது தற்போது ALEXA RANK-ல் 12 வது இடத்தில் உள்ளது. இதோ கீழ் காணும் இத்தளத்தில் நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் http://www.alexa.com/siteinfo/orkut.com

Comments are closed.