கூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது

505

 1,019 total views

கூகிளின் தோல்வியுற்ற  சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை.

கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடு இருந்தது. இதனால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்சை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.பயனர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து கணக்குகளையும் நீக்கியுள்ளது கூகுள் பிளஸ்.

மேலும் கூகிள் வெளியிட்ட செய்தி அறிக்கையில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத காரணத்தினாலும், விரிவான சேவையை வழங்க முடியாத காரணத்தினாலும் கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதாக தெரிவித்தது.

You might also like

Comments are closed.