IBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது

860

 726 total views

மாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 200000 பெண்களுக்கு  ஸ்டெம் (STEM – Science, Technology, Engineering and Math) துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வழங்க IBM நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Blockchain , Cloud Computing , Watsan Super Computer என IBM இன் தொழில்நுட்பங்களில் திறன்மிக்க ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் வெளிவரவேண்டும் எனும் நோக்கிலும், அதிலும் அதிக பெண்கள்/மாணவிகள் பலனடைய வேண்டும் எனும் நோக்கில் IBM திட்டங்களை அறிவித்துள்ளது. TechTamil வாசக வாசகிகள் இந்த முன்னெடுப்புகளை உங்கள் நட்பு வட்டங்களில் பகிர்ந்து பலனடைய கேட்டுக்கொள்கிறேன்.

  1. Advanced Diploma Programme 2 ஆண்டு படிப்பை புதிய தொழில்நுட்பம் சார்ந்த பாடதிட்டத்துடன் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து 100 ITI  (50 மகளிர் ITI ) கல்வியகங்களில் வழங்கப்பட உள்ளது. இதில் Cloud Computing , Artificial Intelligence படிப்புகளும் அடக்கம்.
  2. ஏற்கனவே உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின்மூலம் கணித ஆசிரியர்களுக்கு Watson சூப்பர் கணினி மூலம் சிக்கலான கணக்குகளை தீர்க்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
  3. இணையம் வழியாக TryScience எனும் ஏற்பாட்டின் மூலம் 40 லட்சம் பள்ளி கல்லூரி  ஆசிரியர்களுக்கு Indian Open Educational Resources community for STEM அமைப்பு வழியாக பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 மாநிலங்களில் 9 இந்திய  மொழிகளின் மூலம் 55000 பயிற்றுநர்கள் மூலம் வரும் 5 ஆண்டுகளுக்குள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
  4. அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் இருக்கும் 2 லட்சம் மாணவிகளுக்கு STEM பயிற்சியை “new collar” பணிகள் எனும் வழியில் செயல்படுத்த உள்ளது .
  5. மத்திய அரசின் “அடல் செய்முறை ஆய்வகம் Atal Tinkering Labs “ மூலம் ஏற்கனவே பயிற்சிகள் கொடுக்கும் 4000 பயிற்றுநர்கள் , 6 லட்சம் பயனாளிகளுக்கும்  IBM பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக புதிதாக 2500 பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர், இதில் IBM பொறியாளர்கள் 300 பேரும் பங்கேற்பர். “Mentor of Change “ எனும் திட்டத்தின் மூலம் இந்த பயிற்றுநர்கள் செயல்படவுள்ளனர்.

இதுபோக P-TECH எனும் அப்ரண்டீஸ் முறையை 13 நாடுகளில்உள்ள 200 கல்லூரிகளில் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கல்லூரியில் படிக்கும் போதே வேலைவாய்ப்பிற்கு தகுதியான திறன்களை கற்கும் வாய்ப்பை  ஆண்டிற்கு 1.25 லட்சம் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் திட்டத்தையும் IBM 2017 முதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதில் பயிலும் மாணவர்களில் 91% பேர் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

You might also like

Comments are closed.