முடிவை நெருங்கும் BPL மொபைல்

556

 2,599 total views

BPL மொபைல் என்று அறியப்படுகிற லூப் மொபைல்  நிறுவனமானது 1994​ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த BPL மொபைல் இந்தியாவின் முதல்  மொபைல் நிறுவனம் ​என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மார்ச் 2009ல் லூப் மொபைல் என்று  மாற்றப்பட்டது.

bplloop1

மும்பையை ​தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லூப் மொபைல் நிறுவனத்தை பார்தி ஏர்டெல் வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டது. ஆனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்காததால் லூப் மொபைல் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் கைவிட்டது.

 கடந்த மார்ச் மாதம் இந்த இணைப்பு குறித்து தொலைத் தொடர்பு துறைக்கு ​அனுமதி விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இந்த இணைப்பு நடக்காததால் லூப் மொபைல் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று லூப்மொபைல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சூர்யா மகாதேவன் தெரிவித்தார்.

0

 மும்பை நகரத்தில் தன்னுடைய வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக ஏர்டெல் நிறுவனம் லூப் மொபைலை இணைப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த இணைப்பில் வாடிக்கையாளர்களை மட்டும் எடுத்துக்கொண்ட ஏர்டெல் பணியாளர்களைத் தவிர்த்துவிட்டது. இந்த இணைப்பு தொடர்பான நிதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றாலும் ரூ.700 கோடி இருக்கும் என்று தெரிகிறது.

 லூப் மொபைல் நிறுவனத்தின் உரிமம் வரும் நவம்பர் 29-ம் தேதி வரைதான் இருக்கிறது. வாடிகையாளர்கள் மற்ற டெலிகாம் நிறுவனத்துக்கு மாறுவதற்கான வேலைகளைச் செய்கிறோம் என்று லூப் மொபைல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. லூப் மொபைல் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருக்கின்றன. 50சதவீத பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

CT24_LOOP_MOBILE-1_2168882f

 இந்த இணைப்பு அறிவிப்பு வந்த போது லூப் மொபைல் நிறுவனத்தில் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். தனியார் வங்கியான ஆக்ஸிஸ், லூப் மொபைல் நிறுவனத்துக்கு 215 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. இந்த இணைப்பு ரத்தாகிவிட்டதால் அந்த வங்கிக்கு இ்த்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மும்பை,ஹரியானா, கொல்க்கத்தா, அசாம் மத்தியபிரதேசம்,ஒரிசா,பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 21 தொலைத்தொடர்பு வட்டத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டாலும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மும்பையில் மட்டுமே அதிகம்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Comments are closed.