அமேசானின் கேன்வாஸ் டெக்னாலஜி
832 total views
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது கேன்வாஸ்டெக்னாலஜியுடன் இணைந்து ரோபாட்டிக்ஸ் பிரிவில் தனது சேமிப்புகிடங்கில் தானாக வேலைசெய்யும் இயந்திரங்களை வடிவமைத்துள்ளது.
“நாங்கள் கேன்வாஸ் டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் மூலம் ஈர்க்கப்பட்டு, எதிர்காலத்திற்கான பாதுகாப்பு மற்றும் பணியிட அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ரோபாட்டிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கேன்வாஸ், ஏற்கனவே ஏராளமான சுவாரஸ்யமான தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியுள்ளது இதில் கேன்வாஸ்வின் முழுமையான தன்னியக்க வண்டி அமேசானின் விநியோகத்தை அதிகரிக்க உதவும் மற்றும் தனது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை மிகவும் வேகமாக கொண்டு சேர்க்கலாம் என அமேசான் நம்புகிறது.
எவ்வாறு செயல்படும்
- இந்த ரோபோ நான்கு சிறிய சக்கரங்களுடன் இரண்டு அடுக்கு தட்டுகளை பெற்று அமைந்துள்ளது .
- மேலும் ரோபோக்கள் 3D இமேஜிங் உதவியுடன் தானாக இயங்கும் செல்ப் டிரைவ் கார்களை போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானாக நகரும் ,இந்த வகை ரோபோக்கள் தொழிலார்களின் தேவையை குறைப்பதுடன் தனது வேலையை மிகவும் துல்லியமாக செய்து முடிக்கும். இந்த ரோபோக்கள் தொழிலாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ரோபோக்கள் செல்லும் வழியில் யாரேனும் மனிதர்களோ அல்லது வாகனமோ வந்தால் சிக்னல் மூலம் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல செயல்படும்.
கேன்வாஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி நிமா கெய்வான், அடுத்த வாரம் பெர்கிலேயில் அறிமுகம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Comments are closed.