குற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்

82

 334 total views,  2 views today

குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ளது.

இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும்.

ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது.
“Active Denial System”(ADS) என்று பெயரிடப்பட்டுள்ள micro wave கதிர்வீச்சு ஆயுதத்தை அமெரிக்க இராணுவம் உருவாக்கியுள்ளது.

வர்ஜீனியா மாநிலம் குவான்டிகோ நகரில் உள்ள இராணுவ தளத்தில் 2 வாரம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு இந்த ஆயுதம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இது செயல்பாடு குறித்து இராணுவ அதிகாரிகள் கூறியதாவது: மரணம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தும் ஆயுத ஆராய்ச்சியில் அமெரிக்கா நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.

15 ஆண்டு முயற்சிக்கு பிறகு ஏடிஎஸ் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல, ஏடிஎஸ் கருவியில் இருந்து மைக்ரோவேவ் ரேடியோ கதிர்வீச்சு வெளிப்படும்.

வீட்டு உபயோக பொருட்களில்(மைக்ரோவேவ் ஓவன்) இருக்கும் கதிர்வீச்சைவிட இது 100 மடங்கு வலுவாக இருக்கும்.

சக்தி வாய்ந்த லென்ஸ் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரியைக்கூட துல்லியமாக குறிபார்த்து சுட முடியும்.

கருவியில் இருந்து 95 ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு கதிர்வீச்சு பாயும். சாதாரண நிலையில் மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட். 2 வினாடிக்கு இந்த கதிர்வீச்சு உடலில் பாய்ந்தாலே 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பாயும். உடல் எரியும்.

அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் கதிர்வீச்சு எதிரியை தாக்குவதால் உடல் முழுவதும் பற்றியெரிவது போல எரிச்சல் ஏற்படும். எதிரி நிலைகுலைந்து விடுவார்.

ஆனால் தோலில் மிக மிக சொற்பமான ஆழத்துக்கு(ஒரு இஞ்ச்சில் 64-ல் ஒரு பங்கு) மட்டுமே கதிர்வீச்சு இறங்கும் என்பதால் காயம் ஏற்படாது.

மனிதர்கள் மீது 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்த கதிர்வீச்சு பாய்ச்சி சோதனை செய்யப்பட்டது. அதில் 2 முறை மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே இது மிகவும் பாதுகாப்பானது. ஆப்கான் போரின் போது ஏடிஎஸ் ஆயுதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

You might also like

Comments are closed.