Ethiopia-வில் Skype சேவையை பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை
1,053 total views
Ethiopia நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் Skype அல்லது Google Voice சேவையை அந்த நாட்டினுள் பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என Al Jazeera செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
Ethio Teleco என்ற ஒரே ஒரு தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதுவும் அரசாங்க நிறுவனம். இந்த புதிய சட்டத்தின் மூலம் அன்னிருவனம் சேவைகளை முடக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கைபேசி சேவையை உபயோகிபவர்கள் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். Ethio Teleco நிறுவனம் இந்த சட்டத்தை அமல்படுத்த இதற்காக புதிய சாதனம் ஒன்றை நிறுவியுள்ளது.
Ethiopia அதிகாரிகள் தெரிவிக்கையில் தங்களது நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் மற்ற ஆப்பிரிக்க நாடுகள் கருத்து தெரிவிக்கையில் மக்களின் சுதந்திரத்தை இந்த சட்டம் பாதித்து உள்ளது என்றனர்.
Comments are closed.